சென்னை: தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் வீசும் அனல் காற்றால் மதிய வேளையில் பிரசாரம் செய்வதை தவிர்க்குமாறு அரசியல் கட்சிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரசாரத்தின் இறுதி நாளான ஏப்ரல் 4ஆம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் பிரசாரம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

