தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.1க்கு இட்லி விற்பனை செய்யும் மூதாட்டிக்கு சொந்த வீடு

1 mins read
eb3775e9-604a-4877-a968-7f7c51c25351
இட்லி விற்பனை செய்யும் கம­லாத்­தா­ள் பெயரில் நிலம் வாங்கி, அதில் வீட்டுடன் இட்லிக் கடையும் கட்டப்படுகிறது. படம்: ஊடகம் -

கோவை: கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி, மக்களின் பசிப்பிணியைத் தீர்த்து வரும் 'இட்லி பாட்டி' கம­லாத்­தா­ளுக்கு மஹிந்­திரா நிறு­வ­னம் சொந்த வீடு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

கோவை ஆலந்துறையை அடுத்த வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள். 87 வய தான இவருக்கு சொந்­த­மாக நிலம் வாங்கி, அதை அவ­ரது பெய­ரில் பதிவு செய்துள்ளது மஹிந்திரா நிறுவனம்.

அத்துடன், அந்த நிலத்­தில் கமலாத்­தா­ளுக்­கான வீட்டையும் இட்லிக் கடை நடத்­து­வ­தற்­கான கட்டு­மா­னத்­தை­யும் அந்­நி­று­வ­னம் தொடங்­கி­யுள்ளது.

அண்ைமயில் கமலாத்தாளைப் பற்றி மஹிந்­திரா குழுமத் தலை­வர் ஆனந்த் மஹிந்­திரா தனது டுவிட்­டர் பக்­கத்­தில், கோவை­யில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என மலி­வான விலை­யில் விற்­பனை செய்து ஏழை எளிய மக்­களின் பசி­யாற்றி வரும் கம­லாத்­தாள் குறித்து பாராட்டி புகழ்ந்­தி­ருந்­தார்.

இந்தப் பதிவின் காரணமாக சமூக வலைத்­தள வாசி­க­ளி­டையே இவர் பிரபலமடைந்தார். அவ­ரது சேவை­யும் பெரும் பாராட்­டைப் பெற்­றது. இதை­ய­டுத்து கோவை­யில் இயங்கி வரும் பாரத் கேஸ் நிறு­வ­னம், உட­ன­டி­யாக கம­லாத்­தா­ளுக்கு இல­வ­ச­ கேஸ் அடுப்பு வழங்­கி­யது.