திருச்சி: திருச்சி கிழக்கு சட்ட மன்றத் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்தத் தொகுதிக்கான வாக்குச்சவாடி ஒன்றில் உள்ள வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் ஒரு வாக்காளருக்குப் போடும் வாக்கு இன்னொரு வாக்காளரின் சின்னத்தில் போய் பதிவானது. இதனை தணிக்கை எந்திரமான விவிபேட் மூலம் அறிந்த வாக்காளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வேறு வாக்கு எந்திரம் மாற்றப்பட்டது. தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 134 கட்டுப்பாடு யூனிட்டுகள், 559 விவிபாட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.