'நாமக்கல் தொகுதி வாக்காளர்களுக்கு தங்கக்காசு டோக்கன்'

'நாமக்கல் தொகுதி வாக்காளர்களுக்கு தங்கக்காசு டோக்கன்'

2 mins read
b42c01fc-26dc-4e92-9d22-70356f8dd39f
-

நாமக்­கல்: நாமக்­கல் மாவட்­டத்­தில் வாக்­கா­ளர்­க­ளுக்கு பணம் மற்­றும் பரிசு பொருட்­கள் வழங்­கப்­ப­டு­கி­றதா? என்று தேர்­தல் பிரிவு அதி­கா­ரி­கள் கண்­கா­ணித்து வரு­கின்­ற­னர். ஆனால் பல இடங்­களில் வாக்­கா­ளர்­க­ளுக்கு அர­சி­யல் கட்­சி­யி­னர் மூலம் பணம் பட்­டு­வாடா செய்­யப்­பட்டு வரு­வ­தாக பர­வ­லாக புகார்­கள் வந்­தன.

இந்த நிலை­யில், நாமக்­கல் தொகு­திக்­குட்­பட்ட நர­சிம்­மர் கோவில் வாக்­குச்­சா­வ­டிக்கு அருகே வசிக்­கும் வாக்­கா­ளர்­கள் நேற்­றுக் காலை திமுக கட்­சி­யி­னர் தங்­கக் காசு டோக்­கன் விநி­யோ­கம் செய்து வந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

குறிப்­பாக ஒரு வீட்­டில் 5 வாக்­கு­கள் இருக்­கும் பட்­சத்­தில் அந்த வீட்­டிற்கு ஒரு தங்க காசு டோக்­கன் என்ற முறை­யில் வழங்­கப்­பட்­ட­தாக தெரி­கிறது. இது­பற்றி தக­வல் அறிந்த அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்து ஓட்­டுக்கு டோக்­கன் வினி­யோ­கம் செய்த தி.மு.க.வின­ரி­டம் இருந்து 100க்கும் மேற்­பட்ட தங்­கக் காசு டோக்­கன்­களை வாங்­கிக் கிழித்து எறிந்­த­னர். இந்த டோக்­க­னில் வாக்­கா­ள­ரு­டைய பெயர், முக­வரி, குடும்ப அட்டை எண், செல்­போன் எண் உள்­ளிட்­டவை குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. மேலும் அதில் தங்­க­காசு வடி­வில் மாதிரி உரு­வம் பதிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த டோக்­கன் வைத்­தி­ருந்த பையை அ.தி.மு.க.வினர் பிடுங்கி அரு­கில் இருந்த சாக்­கடை கால்­வா­யில் வீசி­னர். இத­னால் இரு கட்­சி­யி­ன­ருக்­கும் இடையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்டு மோதல் சூழ்­நிலை உரு­வா­னது. அங்கு பதற்­ற­மும் பர­ப­ரப்­பும் ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து போலி­சார் அங்கு விரைந்து வந்து இரண்டு கட்­சிக்­கா­ரர்­க­ளை­யும் சமா­தா­னப்­ப­டுத்தி அங்­கி­ருந்து கலைந்து போக செய்­த­னர்.

தி.மு.க.வுக்கு வாக்­க­ளித்­து­விட்டு அந்த டோக்­கனை கொண்டு வந்து காண்­பித்­தால் தங்க நாண­யம் இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்­ள­லாம் என வாக்­கா­ள­ரி­டம் கூறி தி.மு.க.வினர் விநி­யோ­கம் செய்­த­தாக அப்­ப­குதி மக்­கள் தெரி­வித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதுதொடர்­பாக தேர்­தல் அதி­கா­ரி­யி­டம் அதிமுக தரப்­பில் புகார் செய்­யப்­பட்டதாகக் கூறப்படுகிறது.