கீழடியில் மீண்டும் 2,600 ஆண்டு பழமையான மண்பானைகள்

கீழடியில் மீண்டும் 2,600 ஆண்டு பழமையான மண்பானைகள்

2 mins read
594ac50e-9c3a-421c-b423-c96f8edb658c
கீழடியில் மீண்டும் 2,600 ஆண்டுகள் பழமையான மண் பானைகள், கிண்ணங்கள் கிடைத்து உள்ளன. படம்: இந்திய ஊடகம் -

கீழடி: கீழ­டி­யில் மீண்­டும் 2,600 ஆண்­டு­கள் பழ­மை­யான மண்­பா­னை­கள், கிண்­ணங்­கள் கண்­டு­ பிடிக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது 7வது கட்ட அகழ்­வா­ராய்ச்சி அங்கு நடை­பெற்று வரு­கிறது.

மதுரை அருகே உள்ள கீழடி ஊராட்­சிக்கு உட்­பட்ட பகு­தி­களில் மத்­திய-மாநில அர­சு­க­ளின் தொல்­லி­யல் துறை சார்­பில் ஏற்­கெ­னவே ஐந்து கட்­டங்­க­ளாக அகழ்­வா­ராய்ச்சி பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. கடந்த வரு­டம் 6ஆம் கட்ட அகழ்­வா­ராய்ச்சி பணி­கள் மாநில தொல்­லி­யல் துறை சார்­பில் கீழடி மற்­றும் கொந்­தகை, அக­ரம், மண­லூர் ஆகிய 4 இடங்­களில் நடை­பெற்­றன. இதில் சுமார் 2,000க்கும் மேற்­பட்ட பழங்­காலப் பொருட்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அந்த பொருட்­களை ஆய்வு செய்­யும்­போது 2,600 ஆண்­டு­க­ளுக்கு முன்பு வாழ்ந்த பழங்­கா­லத் ­த­மி­ழர்­க­ளின் வாழ்க்கை வர­லாறு பற்றி தெரிய வந்­துள்­ளது. தற்­போது 7ஆம் கட்ட அகழ்­வா­ராய்ச்சி பணி­கள் நடக்­கின்­றன.

முத­லில் கீழ­டி­யி­லும் பிறகு கொந்­தகை, அக­ரம் பகு­தி­க­ளி­லும் ஆரம்­பிக்­கப்­பட்டு பணி­கள் நடை­பெற்று வரு­கின்றன. கீழ­டி­யில் ஒரு குழி­யில் மணி­கள், பானை ஓடு­கள், கொந்­த­கை­யில் முது­மக்­கள் தாழி, மண் கிண்­ணங்­கள், அக­ரத்­தில் சேத­மான பானை, தானி­யங்­கள் சேக­ரித்து வைக்­கும் தாழி ஆகி யவை கண்­ட­றி­யப்­பட்­டன.

இந்த நிலை­யில் கீழ­டி­யில் 2வது குழி தோண்­டப்­பட்டு வந்­தது. இந்தக்குழி­யில் சுமார் 9 அடி ஆழத்­தில் தோண்­டும்­போது சேத­முற்ற நிலை­யில் சிறிய பானை­கள், சிறிய மண் கிண்­ணங்­கள் மற்­றும் பழங்­கால வெள்ளை பாசி­கள் கிடைத்­துள்­ளன. மேலும் சேத­ம­டைந்த நிலை­யில் அதிக மண்­பாண்ட ஓடு­களும் கிடைத்­து உள்­ளன.

பழங்­கால வெள்ளை பாசி கிடைத்­த­தால் சிறிய பொருட்­கள் மேலும் கிடைக்­க வாய்ப்பு உள்ளது.