6,000 பேரை நெருங்கிய பாதிப்பு; ஒரேநாளில் 23 போ் மரணம்

6,000 பேரை நெருங்கிய பாதிப்பு; ஒரேநாளில் 23 போ் மரணம்

1 mins read
63f8c432-b593-4879-b5d8-a159e8f5633f
-

சென்னை: தமி­ழ­கத்­தில் சனிக்­கிழமை ஒரேநாளில் 5,989 பேருக்கு கிருமி பாதிப்பு உறுதியானது. அத்­து­டன், பாதிக்­கப்­பட்­ட­வா்­களில் 23 போ் ஒரே நாளில் உயி­ரி­ழந்­தனா்.

இதுகுறித்து தமி­ழக அர­சின் சுகா­தா­ரத்­துறை சனிக்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், "தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்தில் 84,546 மாதி­ரி­கள் கொரோனா பரி­சோ­த­னைக்கு எடுத்­துக்கொள்­ளப்­பட்­டன. அதில் 5,989 பேருக்கு கிருமித்தொற்று இருப்­பது உறுதியானது. இவர்களில், சென்­னை­யில் மட்டும் 1,977 போ் பாதிக்­கப்­பட்டிருந்தனர்.

"இதன்­மூ­லம் மாநி­லம் முழு­வதும் இது­வரை பாதிக்­கப்­பட்­ட­வா்­க­ளின் எண்­ணிக்கை 9,26,816 ஆக அதி­க­ரித்­துள்­ளது. தொற்­றால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வந்­த­வா்­களில் 23 போ் சனிக்­கி­ழமை உயி­ரி­ழந்­தனா். அதில் 12 போ் சென்­னை­யைச் சோ்ந்த­வா்­கள். இதையடுத்து, மொத்த பலி எண்­ணிக்கை 12,886 ஆக­வும் சென்­னை­யில் உயி­ரி­ழப்பு 4,312 ஆக­வும் அதி­க­ரித்­துள்­ளது.