கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,106ஆக உயர்வு

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,106ஆக உயர்வு

1 mins read
bd742f96-8def-4119-a1dd-64c2e5fc2732
-

சென்னை: சென்­னை­யி­லுள்ள 15 மண்­ட­லங்­களில் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­க­ளின் எண்­ணிக்கை 1,106 ஆக உயர்ந்­துள்­ளது.

ஒரே தெரு­வில் மூன்று பேருக்­கும் அதி­க­மா­னோர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டால், அந்த தெரு அடைக்­கப்­பட்டு கட்­டுப்­பாட்டு பகு­தி­யாக அறி­விக்­கப்­ப­டு­கிறது. இந்­தப் பகு­தி­கள் அனைத்­தும் தடுப்­பு­கள் அமைத்து யாரும் உள்ளே செல்­லவோ, வெளியே போகவோ முடி­யாத வண்­ணம் அடைக்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், சென்­னை­யில் கிருமி பாதிப்பு அதி­க­முள்ள தெருக்­கள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­களாக அறி­விக்­கப்­பட்டு கிருமி­நாசினி தெளிக்கப்பட்டது.

கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­க­ளுக்கு வெளி­யாட்­கள் செல்­லக் கூடாது என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்நிலை­யில், சென்­னை­யில் நேற்று 931ஆக இருந்த கட்­டுப்­படுத்­தப்­பட்ட பகு­தி­க­ளின் எண்­ணிக்கை இன்று 1,106ஆக அதி­க­ரித்­துள்­ளது. தேனாம்­பேட்டை, அண்­ணா­ந­கர், கோடம்­பாக்­கம், ராய­பு­ரம், திரு­விக நகர் ஆகிய மண்­ட­லங்­களில் அதி­க­ள­வில் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­கள் உள்­ளன.