வார இறுதியில் கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு தடை

வார இறுதியில் கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு தடை

1 mins read
2c50e16b-ddf2-44b4-8b96-b3ef795642c6
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் சனி, ஞாயிறு ஆகிய வாரயிறுதி நாள்களிலும் அனைத்து அரசு விடுமுறை நாள்களிலும் பொதுமக்கள் கூடுவதற்கு நேற்றுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கூட்டம் கூடுவதால் கிருமி பரவும் அபாயம் உள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம் -

சென்னை: சென்னை, செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் மாவட்­டங்­களில் உள்ள அனைத்து கடற்­கரை பகுதி களி­லும் வார இறுதி நாட்­க­ளான சனி, ஞாயிற்­றுக்கிழ­மை­க­ளி­லும் அனைத்து அரசு விடு­முறை நாட்­க­ளி­லும் பொது­மக்­கள் கூடு­வ­தற்குத் தடை விதிக்­கப்படு­வ­தாக தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

நேற்று ஞாயிறு முதல் இந்­தத் தடை உத்­த­ரவு அம­லுக்கு வந்­ததை அடுத்து, கடற்­கரைப் பகு­தி­களில் போலி­சார் தடுப்­பு­கள் அமைத்து கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் மின்­னல் வேகத்­தில் உக்­கி­ர­ம­டை­யும் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் வகை­யில், அரசு இம்­மா­தம் 30ஆம் ேததி வரை சில கட்­டுப்பாடு­களை அறி­வித்துள்ளது.

இந்­நி­லை­யில், ரம­லான் மாதத்தை ஒட்டி தொழுகை நடத்­து­வ­தற்கு வச­தி­யாக பள்­ளி­வா­சல்­களை இரவு 10 மணி வரை திறந்­தி­ருக்க அனு­ம­திக்க வேண்­டும் என பல்­வேறு இஸ்­லா­மி­யத் தலை­வா்­கள் அர­சுக்கு வேண்­டு­கோள் விடுத்­தி­ருந்­தனா்.

இக்கோரிக்­கையை ஏற்­றுக் கொண்­டுள்ள தமி­ழக அரசு, கட்­டுப்­பா­டு­களில் சில திருத்­தங்­கள் செய்து அறிக்ைக வெளி­யிட்­டுள்­ளது. அதன்­படி, "அனைத்து வழி பாட்­டுத் தலங்­க­ளி­லும் இரவு 8 மணி வரை மட்­டுமே தரப்பட்டிருந்த வழிபாட்டு நேர அனுமதியை இரவு 10 மணி வரை­ நீட்டித்து அனு­மதி வழங்­கி உள்­ளது.

ஆனா­லும், திரு­வி­ழாக்­கள், மதம் சாா்ந்த கூட்­டங்­கள் நடத்த அனு­மதி இல்லை என­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்துடன், புதிய திரைப்­ப­டங்­கள் முதல் ஏழு நாட்­கள் மட்­டும் அனு­ம­திக்­கப்­பட்ட காட்­சி­களை விடவும் கூடு­த­லாக ஒரு காட்சியைத் திரை­யிடவும் அனுமதிக்­கப்­ப­டு­கிறது.