காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்

விரு­து­ந­கர்: விரு­து­ந­கர் மாவட்­டம், ஸ்ரீவில்­லி­புத்­தூர் தொகு­தி­யில் காங்­கி­ரஸ் வேட்­பா­ள­ரா­கப் போட்டி­யிட்ட மாத­வ­ராவ், 63, கொரோனா கிருமித்தொற்று காரணமாக நேற்று காலை கால­மா­னார்.

மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரு வாரமாக இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சமயத்தில் அவருக்கு இரு முறை மாரடைப்பு ஏற்பட்ட தாகவும் நுரையீரல் பாதிப்பு இருந்த தாகவும் சொல்லப்படுகிறது.

மாதவராவ் சென்னையில் வசித்து வந்தாலும் அவரது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்தான் என்பதால் அங்கு அடக்கம் செய்ய கொண்டு வரப்படலாம் எனவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

தேர்­த­லில் திமு­க­வுடன் கூட்­டணி அமைத்­துள்ள காங்­கி­ரஸ் 20 தொகு­தி­களில் போட்­டி­யிட்­டது. அதில், ஸ்ரீவில்­லி­புத்­தூர் தொகு­தி­யில் போட்­டி­யிட்ட மாதவ ராவுக்கு பிர­சா­ரத்­தின்போதே திடீ­ரென உடல்­ந­லம் குன்றியது. இதை­ய­டுத்து மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தைக்காக இறு­திக்­கட்ட பிர­சா­ரத்­தில் அவரது மகள் திவ்யா ராவ் கள­மி­றங்­கி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!