செய்திக்கொத்து

தண்ணீர்ப் பந்தலைத் திறக்கும்படி டிடிவி தினகரன் வேண்டுகோள்

சென்னை: கிருமிப் பரவலுடன் கோடை வெயிலின் தாக்கமும் தமிழக மக்களை அவதிக்கு ஆளாக்கி வரும் நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் மாநிலம் முழுவதும் தண்ணீர் பந்தல்களையும் நீர் மோர் பந்தல்களையும் திறக்கும்படி அமமுக பொதுச்செயலர் தினகரன் அவரது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். அந்தந்த பகுதி நிர்வாகிகளும் தொண்டர்களும் தண்ணீர்ப் பந்தல்களைத் திறந்து மக்கள் பயன்பெற உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று முக்கிய ஆலோசனை

நடத்தும் முதல்வர்

சென்னை: தமிழகத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இப்போது 6,000ஐ நெருங்கிவிட்டது.

இந்நிலையில், இந்தக் கிருமிப் பரவல் பிரச்சினையை சமாளிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பிறகு தமிழக முதல்வரிடம் இருந்து ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மருத்துவமனையில் அனுமதி

அரவக்குறிச்சி: பாஜக மாநிலத் துணைத் தலைவரும் அரவக்குறிச்சி வேட்பாளருமான அண்ணாமலை கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாள்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிருமி பயமின்றி காசிமேடு, வானகரத்தில் மீன் வாங்குவதற்கு குவிந்த மக்கள்

சென்னை: கொரோனா கிருமிப் பரவ லின் இரண்டாம் அலை வேக மாகப் பரவி வரும் நிலை யில், சென்னை காசி மேடு மீன்பிடி துறைமுகம், வானகரம் மீன் சந்தையில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள் சமூக இடைவெளியில்லாமல் ஒரே இடத்தில் குவிந்ததால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

மீன் பிரியர்கள் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டிய நிலையில், ஒலிபெருக்கிகள் மூலம் போலிசார் எச்சரிக்கை விடுத்துக்கொண்டு இருந்த நிலையிலும் கிருமிப்பரவலைப் பற்றிய பயமின்றி, சமூக இடைவெளியைக் காற்றில் பறக்கவிட்டனர். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!