சென்னை: சென்னையில் அடுத்த 20 நாள்கள் மிகவும் நெருக்கடியான காலகட்டமாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை பாலவாக்கம் பகுதி யில் மாநகராட்சி சார்பில் நடத்தப் படும் காய்ச்சல் முகாம்களையும் வீடுவீடாகச் சென்று நடத்தப்படும் பரிசோதனைகளையும் ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், "சென்னை யில் அடுத்த 20 நாள்கள் நெருக் கடியான காலகட்டமாக இருக்கும். மக்கள் கவனமாக வீட்டுக் குள்ளேயே இருப்பதும் வெளியில் அதிக நடமாட்டத்தைக் குறைத்துக்கொள்வதும் நல்லது.
"கொரோனா விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிப்பது அரசின் வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை அல்ல. மக்களிடையே விழிப்புணர்வையும் கட்டுப்பாட்டை யும் கொண்டு வருவது, மக்களை நலமாக வாழவைப்பதற்காகத்தான்," என்று கூறினார்.
பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் தென்படும்போது மருத்துவமனைக்குச் சென்று தொடக்கத்திலேயே பரிசோதனை செய்துகொண்டால் உயிரிழப்புகளைத் தடுப்பதோடு மற்றவர்களுக்கு இத்தொற்று பரவுவதையும் தவிர்க்கமுடியும்.
"சென்னையில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பினால் 10 நாள்களில் அனைவருக்குமே தடுப்பூசி போடமுடியும். எனவே முடிந்தவரை 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சீக்கிரம் தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது," என்று அறிவுறுத்தினார்.

