முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே வங்கிக்குள் அனுமதி

முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே வங்கிக்குள் அனுமதி

1 mins read
124aec30-12ea-4f8f-af76-17c8d0fe252d
-

சென்னை: இப்போதைய கொரோனா காலகட்டத்தில் முகக்கவசமே ஒருவரின் உயிரைக் காக்கும் கவசமாக விளங்குவதால், இந்த முகக்கவசத்தை அணியாத வாடிக்கையாளர்களை வங்கி களுக்குள் அனுமதிக்கக் கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அந்த அறிக்கையில், "முகக் கவசம் அணியாத வாடிக்கை யாளர்களை வங்கிகளுக்குள் வர அனுமதிக்கக் கூடாது. முகக்கவசம் அணிந்துள்ளவர்களும் வங்கியை விட்டுச் செல்லும் வரை வாய், மூக்கை மூடும் வகையில் முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் உடல் வெப்பப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

"அலுவலக மின்தூக்கிகளை இரண்டு அல்லது நான்கு பேருக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கை யாளர்கள் இடையே தனி மனித இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.