உளுந்தூர்பேட்டை: கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, ஆண்டுதோறும் நடத்தப்படும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இத னால், திருநங்கைகள் பலரும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் பிரசித்திபெற்ற கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இவ்வாண்டு கிருமிப் பரவலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் வகையில், சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனினும் வழக்கம்போல் கூத்தாண்டவர் கோயிலில் பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மும்பை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகளும் கலந்துகொள்வர்.

