'திமுக ஆளுங்கட்சியாகும் வாய்ப்பு'
சென்னை: நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகதான் ஆளும் கட்சியாக ஆட்சிக் கட்டிலில் அமரும் என்று திமுகவுக்குத் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வர் ஆவார். அவரை யாராலும் அசைக்கமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிவாரண நிதி
கலைநிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கோரியுள்ள கரகாட்டக் கலைஞர்கள். படம்: தமிழக ஊடகம்
தஞ்சாவூர்: கொரோனா கால சிறப்பு நிவாரண உதவித் ெதாகையாக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 6,810 கலைஞர்கள் பயன் அடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிைடயே, கொரோனா இரண்டாவது அலையால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தஞ்சாவூர் மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள், மெல்லிசைக் கலைஞர்கள், கிராமியக் கலை ஞர்கள் உள்ளிட்ட பலரும் நேற்று காலை தஞ்சாவூர் ரயிலடியில் தாரை தப்பட்டை, மேளதாளத்துடன் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தி, கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திடீர் நில அதிர்வால் பயத்தில் வீட்டை விட்டு வெளியில் ஓடிவந்த மக்கள்
திருப்பத்தூர்: திருப்பத்தூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குரிசிலாப்பட்டு, கந்திலி, நாட்றம்பள்ளி, அச்சமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.
அந்த அதிர்வு அச்சம் அடையச் செய்யும் வகையில் கைபேசி அதிர்வலைகளைப் போன்று பலத்த சத்தத்துடன் இருந்ததால் அச்சம் அடைந்த மக்கள், வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். ஆனால், இதுகுறித்து எந்த ஓர் அதிகாரபூர்வ விளக்கமும் இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப்படவில்லை.
'அடுத்த ஐந்து நாள்கள் மழை பெய்யும்'
சென்னை: வளிமண்டலச் சுழற்சியின் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாள்களுக்கு இடி, மின்னல், காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாளை ஏப்ரல் 14ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

