சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். பட்டாசு தயாரிப்பே இவர்களது முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சிவகாசி பட்டாசு ஆலைகளில் அண்மையில் பலமுறை வெடி விபத்து ஏற்பட்டு, பலர் உயி ரிழந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த வெடி விபத்துகளையும் உயிர்ப்பலியையும் தவிர்க்க அனுபவ சாலிகளை மட்டுமே பணியில் அமர்த்தவேண்டும் என்று மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி சுந்தரேசன் வலியுறுத்தி உள்ளார்.
விபத்தைத் தவிர்ப்பதற்கு சில யோசனைகளையும் கூறியுள்ள அவர், "பட்டாசு தொழிலாளர்கள் பருத்தி ஆடைகளை அணிந்து பணி புரிய வேண்டும். அனுபவம் மிக்கவர்களை, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்ைகயில் மட்டுமே பணி அமர்த்தவேண்டும். இது விபத்து களைப் பெருமளவு குறைக்கும்.
"பட்டாசு தயாரிப்புக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைகளில் மட்டுமே பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். பணிகளை நின்றபடி செய்யவேண்டும். மது அருந்தி விட்டு பணிகளைச் செய்வதோ, கைபேசிகளை ஆலைக்குள் பயன்படுத்துவதோ கூடாது," என அறிவுறுத்தி உள்ளார்.

