சந்தையில் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் வரிசையில் கடைகள் திறப்பு

சென்னை: கோயம்­பேடு காய்­கறி சந்­தை­யில் உள்ள ஒட்­டு­மொத்த கடை­க­ளை­யும் ஒரே நாளில் திறக்­கா­மல் பகுதி பகு­தி­யாக சுழற்­சி­முறை­யில் திறப்­ப­தற்கு மாநில அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இத­னால் வியா­பா­ரி­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

கோயம்­பேட்­டில் மொத்­த­முள்ள 1,800 கடை­களில் ஒற்­றைப்­படை எண் கொண்ட 900 கடை­கள் செவ்­வாய், வியா­ழன், சனிக்­கி­ழ­மை­களில் திறக்­கப்­பட உள்­ளன.

இதே­போல், இரட்­டைப்­படை எண்­க­ளைக் கொண்ட கடை­கள் திங்­கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்­களில் திறக்­கப்­படும் என்­றும் மாநில அரசு அறி­வித்­துள்­ளது.

இதை மீறும் கடை உரி­மை­யா­ளர்­கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என­வும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

ஒவ்ெவாரு நாளும் உக்­கி­ர­ம­டைந்து வரும் கொரோனா கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்க தமி­ழக அரசு பல அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுத்து வரு­கிறது.

அதன்­படி, கொரோனா பாது­காப்பு விதி­மு­றை­களை முறை யாகப் பின்­பற்­றா­த­வர்­க­ளுக்கு ஆங்­காங்கே அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு வரு­கிறது. மக்­கள் கூட்­ட­மாக பொழு­து­போக்­கும் கடற்­கரை பகு­தி­க­ளுக்­கும் தடை விதிக்­கப் பட்டு உள்­ளது.

இதைத்­தொ­டர்ந்து, கிரு­மிப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­யாக கோயம்­பேடு சந்­தை­யில் உள்ள சில்­லறை விற்­பனை கடை­கள் ஏப்­ரல் 10ஆம் தேதி­மு­தல் தற்­கா­லி­க­மாக மூடப்­படும் என அரசு கடந்த வியா­ழ­னன்று அறி­வித்­தது.

இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்த கோயம்­பேடு சந்தை சில்­லறை வியா­பா­ரி­கள், "சில்­லறை விற்­பனை கடை­களை முழு­வ­து­மாக மூடு­வ­தற்­குப் பதி­லாக 50% கடை­க­ளைச் சுழற்சி முறை­யில் திறக்க அனு­ம­திக்­க­வேண்­டும்," என்று கோரி­யி­ருந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!