கிருமிப் பரவலைத் தடுக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை 'தேவை ஏற்பட்டால் இரவு நேர ஊரடங்கு'

கிருமிப் பரவலைத் தடுக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை 'தேவை ஏற்பட்டால் இரவு நேர ஊரடங்கு'

1 mins read
253089ce-9d2c-4b8f-9208-46a8b43cc879
கிருமிப் பரவலைத் தடுப்பதற்குத் தொடர்ந்து எடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அருகில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளார். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொேரானா பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த மேலும் சில கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட உள்­ள­தா­க­வும் தேவை ஏற்­பட்­டால் இரவு நேர ஊர­டங்கு அறி­விக்­கப் பட­லாம் என்­றும் தக­வல்­கள் தெரி­வித்து உள்­ளன.

தேர்­தல் ஆணை­யத்­தின் அனு­ம­தி­யு­டன் சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் முதல்­வர் பழ­னி­சாமி தலை­மை­யில் அவ­சர ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது.

அமைச்­சர்­கள், அதி­கா­ரி­கள் உள்­ளிட்டோா் கலந்­து­கொண்ட கூட்­டத்­தில், கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கப் புதிய கட்­டுப்­பா­டு­களை விதிப்­பது, விதி­மு­றை­க­ளைக் கடு­மை­யாக்­கு­வது குறித்து ஆலோ சிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கிரு­மிப் பர­வ­லுக்கு மத்­தி­யில் 'பிளஸ் 2' பொதுத்­தேர்வும் நடத்­தப்­பட உள்­ள­தால் தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுப்­பது குறித்­தும் யோசனைகள் கேட்கப்பட்டுள்ளது.

எனி­னும் கூட்­டத்­தில் ஆலோ சித்­தது குறித்­தும் எடுக்­கப்­பட்ட முக்­கிய முடி­வு­கள் குறித்­தும் அர­சி­டம் இருந்து விரை­வில் அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் வரும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தமி­ழ­கத்­தில் கடந்த சில நாள்­க­ளா­கவே கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

இதை­ய­டுத்து, கடந்த வாரம் சில கட்­டுப்­பா­டு­களை விதித்திருந்த அரசு, தொடர்ந்து மேலும் சில கட்­டுப்­பா­டு­களை விதிக்­க­லாம் என்­றும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.