துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி

துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி

2 mins read
dafc7a8a-67e8-43a9-b9f4-61fff7b9d35c
-

ஏல­கிரி: சட்­ட­மன்­றத் தேர்­தல் பட்டு­வா­டா­வின்­போது மிஞ்­சிய பணம் அனைத்­தும் திமுக பொதுச்­செ­ய­லா­ளர் துரை­மு­ரு­கன் வீட்­டில் பதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக சமூக ஊட­கங்­களில் தக­வல் பர­வி­யது.

இந்த தக­வலை உண்மை என்று நம்பி, துரை­மு­ரு­க­னுக்­குச் சொந்த மான ஏல­கிரி பண்ணை வீட்­டில் கொள்ளையர்­கள் திருட முயற்சி செய்துள்­ள­னர்.

ஆனால், அவர்­கள் வெறுங்கை யுடன் திரும்­பிச் சென்­ற­தா­க­வும் தங்­க­ளது அடை­யா­ளம் கண் காணிப்புக் கேமரா மூலம் தெரிந்து­வி­டக் கூடாது என்­ப­தற்காக அதில் உள்ள வன்­பொ­ருளை கள­வா­டிச் சென்­ற­தா­க­வும் தக­வல் கள் வெளி­யாகி உள்­ளன.

திமுக பொதுச்­செ­ய­லா­ளர் துரை­மு­ரு­கன் மட்­டு­மின்றி அவ­ரது குடும்­பத்­தைச் சேர்ந்­தோ­ரும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு, மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­ம் ­நி­லை­யில், கொள்ளை முயற்சி நடந்துள்ளது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

ஏற்ெக­னவே கொரோனா தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்ள துரை­மு­ருகனுக்கு சில தினங்­க­ளுக்கு முன் கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னது. அத்­து­டன், அவ­ரது மகன் கதிர் ஆனந்த், துரை­மு­ரு­க­னின் சகோ­த­ரர் உள்­ளிட்­டோ­ருக்­கும் தொற்று உறு­தி­யா­னது.

சென்னை ரேலா மருத்­துவ மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள துரை­மு­ரு­க­னின் உடல்­நி­லையை மருத்­து­வர்­கள் தீவி­ர­மாக கண்­கா­ணித்து வரு­கின்­ற­னர்.

அடிக்­கடி ஓய்­வுக்­காக துரை முரு­கன் இந்த பண்ணை வீட்டில் தங்­கு­வது வழக்­கம். இந்த வீட்டில் திரு­வண்­ணா­மலை மாவட்­டம், புனி­காந்­தூர் பகு­தி­யைச் சேர்ந்த பிரேம்­கு­மா­ரும் அவ­ரது மனைவி சங்­கீ­தா­வும் தங்கி பரா­ம­ரித்து வரு­கின்­ற­னர்.

நேற்று முன்­தி­னம் கொள்ளை யர்கள் பண்ணை வீட்­டின் பெரிய கதவை உடைத்து உள்ளே சென்­றுள்­ள­னர். வீட்­டுக்­குள் பணம், நகை­கள் ஏதும் கிடைக்­கா­த­தால் வீட்­டில் இருந்த பொருட்­க­ளான கட்­டில், பீரோ, நாற்­கா­லி­கள், குளிர்பதனப் பெட்டி உள்­ளிட்ட பொருட்­களை எடுத்­துச் செல்ல முயன்­றுள்­ள­னர். ஆனால் அவை அனைத்­தும் அதிக எடை­யில் இருந்­த­தால் எடுத்­துச் செல்ல முடி­யா­மல் ஏமாற்­ற­ம­டைந்­த­னர்.

ஏல­கி­ரி­மலை காவல்­து­றை­யி­னர் கொள்ளையர்களைத் தீவி­ர­மாகத் தேடி வரு­கின்­ற­னர்.