அமைச்சரின் உதவியாளர் ரூ.8 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக இளம்பெண் புகார்

வாணி­யம்­பாடி: தொழி­லா­ளர் நலத் துறை அமைச்­சர் நிலோ­ஃபர் கபீ­லின் உத­வி­யா­ளர் பிர­கா­சம், அரசு வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி ரூ.8 லட்­சத்தை மோசடி செய்­து­விட்­ட­தாக கைக்­கு­ழந்­தை­யு­டன் வந்த இளம்­பெண் ஒரு­வர் காவல்­ நி­லை­யத்­தில் புகார் அளித்­துள்­ளார்.

இது­கு­றித்து காவல்­து­றை­யினர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

திருப்­பத்­தூர் மாவட்­டம், வாணியம்­பா­டியை அடுத்த வெள்­ளக்­குட்டை கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் ஜெய­சுதா, 30. முது­க­லைப் பட்­ட­தா­ரி­யான இவர் வாணி­யம்­பாடி காவல் நிலை­யத்­தில் அளித் துள்ள புகார் மனு­வில், எனக்கு நண்­ப­ராக அறி­மு­க­மான வாணி­யம்­பா­டி­யைச் சேர்ந்த பிர­கா­சம், தொழி­லா­ளர் நலத்­து­றை­யில் இள­நிலை உத­வி­யா­ளர் பணி­யிடம் காலி­யாக இருப்­ப­தா­க­வும் அமைச்­சர் நிலோ­பர் கபீ­லி­டம் கூறி அந்த வேலையை வாங்­கித் தரு­வ­தா­க­வும் கூறி­னார்.

அதற்­காக நான் ரூ.15 லட்­சத்தை பிர­கா­சத்­தி­டம் கொடுத்­தேன். ஆனால், சொன்னபடி அவர் வேலை வாங்­கித் தர­வில்லை. கடனாக வாங்­கிக் கொடுத்த ரூ.15 லட்­சத்­திற்கு வட்டி கட்ட முடி­யா­மல் திணறிய நிலையில், பிர­கா­சத்­தி­டம் கொடுத்த பணத்தைத் திரும்­பக் கேட்டேன். ஆனால், அவர் தர மறுத்­த­தால் 2019ஆம் ஆண்டு காவல்நிலை­யத்­தில் புகார் அளித்து ஏழு லட்­சத்தை திரும்பப் பெற்றேன். மீதி எட்டு லட்­சத்தை ஒரு வரு­டம் கழித்து தரு­வ­தாகக் கூறி­னார். இன்­னும் கொடுக்­க­வில்லை.

இது­கு­றித்து, அவ­ரி­டம் கேட்­ட­போது, ரூ.8 லட்சத்­தைத் தர­மு­டி­யாது எனக் கூறி எனக்­கும் என் குடும்­பத்­தா­ருக்­கும் கொலை மிரட்­டல் விடுக்­கி­றார் என அந்த இளம்­பெண் புகா­ரில் தெரி­வித்­துள்­ளார்.

போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!