விதிமீறல்:ரூ.2.78 கோடி அபராதப் பணம் வசூல்

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் கடந்த நான்கு நாள்­களில் மட்­டும் கொரோனா தடுப்பு விதி­மு­றை­களை மீறி நடந்து கொண்­ட­வர்­க­ளி­டம் இருந்து ரூ.2.78 கோடி அப­ரா­தத் தொகை வசூ­லாகி உள்­ளது.

தமி­ழ­கத்­தில் உள்ள 38 மாவட்­டங்­களில் சென்­னை­யில் மட்­டும்­தான் அதிக அள­வி­லான மக்­கள் கிரு­மித்ெ­தாற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், கடந்த நான்கு நாள்­க­ளாக கொரோனா தடுப்பு விதி­மு­றை­களை முறை­யா­கப் பின்­பற்­றா­த­வர்­கள் மீது போலி­சார் கடும் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­ற­னர்.

முகக்­க­வ­சம் அணி­யா­த­வர்­கள், சமூக இடை­வெளியைப் பின்­பற்­றா­த­வர்களி­டம் ரசீது புத்­த­கம் மூலம் சட்­டம் ஒழுங்கு போலி­சார் அப­ராதம் வசூ­லித்து வரு­கின்­ற­னர்.

முகக்­க­வ­சம் அணி­யா­மல் வெளியே வரு­ப­வர்­க­ளுக்கு ரூ.200, பொது இடங்­களில் எச்­சில் துப்பி னால் ரூ.500, தனி­மைப்­ப­டுத்­தப் படு­வதை மீறி­னால் ரூ.500, தனி மனித இடை­வெ­ளி­யைக் கடைப் பிடிக்­கத் தவ­றி­னால் ரூ.500, வழி காட்டி நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்­றாத வணிக வளா­கங்­க­ளுக்கு ரூ.5,000 என அப­ரா­தம் வசூ­லிக்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், தமி­ழ­கம் முழு­வ­தும் கடந்த 8ஆம் தேதி முதல் நேற்று வரை முகக்­க­வ­சம் அணி யாத­வர்­கள் மீது பதிவு செய்­யப்­பட்ட வழக்­கின் எண்­ணிக்கை 1,30,531. அதன்­மூ­லம் ரூ.2,52,34,900 அபராதத் தொகையாக வசூ­லிக்­கப்­பட்டுள்ளது.

அதே­போல் தமி­ழ­கம் முழு­வ­தும் தனிமனித இடை­வெளியைப் பின்­பற்­றா­த­வர்­கள் மீது கடந்த நான்கு நாள்­களில் பதிவு செய்­யப்­பட்ட 6,465 வழக்குகள் மூலம் ரூ.25,90,000 அப­ரா­தத் தொகை வசூ­லிக்­கப்­பட்டுள்ளது.

இதற்­கி­டையே, கிருமிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்டு வரு­வது தொடர்­பில் மாநில அரசு வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், தமிழ்­நாட்­டில் கடந்த 10ஆம் தேதி வரை 16 லட்­சத்து 37 ஆயி­ரத்து 245 விதி­மீ­றல்­கள் கண்­ட­றி­யப்­பட்டு, தமிழ்­நாடு பொது சுகா­தா­ரச் சட்­டத்தின்கீழ் ரூ.17 கோடியே 92 லட்­சத்து 56 ஆயி­ரத்து 700 அப­ராதம் விதிக்­கப்­பட்டு உள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!