பெண்களைத் தாக்கிய காவல் அதிகாரி பணியிடை நீக்கம்

பெண்களைத் தாக்கிய காவல் அதிகாரி பணியிடை நீக்கம்

1 mins read
b5175f67-57b5-489e-8976-a21e358707bb
-

கோவை: கோவை­யில் உண­வ­கத்­தில் சாப்­பிட்­டுக்கொண்­டி­ருந்­த­வர்­களை லத்­தி­யால் தாக்­கிய காவல் அதி­காரி முத்துவை பணி­யிடை நீக்­கம் செய்து காவல் ஆணை­யர் டேவிட்­சன் தேவா­சீர்­வா­தம் உத்­த­ர­விட்­டுள்­ளார். ­

கோவை, காந்­தி­பு­ரம் பேருந்து நிலை­யம் அருகே உள்ள உண வகத்­தில் நேற்று முன்தினம் இரவு 10.20 மணிக்கு பய­ணி­கள் சாப்­பிட்­டுக்­கொண்டிருந்­த­னர். இரவு 11 மணிக்கு உணவகத்தை மூட­வேண்­டும் என்­பதுதான் மாநில அர­சின் உத்­த­ரவு. இதனால், கடை­யின் கதவு பாதி மூடப்­பட்­டி­ருந்­தது.

அப்­போது உண­வ­கத்­திற்­குள் வந்த காட்­டூர் உதவி ஆய்­வா­ளர் முத்து, வந்த உட­னேயே லத்­தி­யால் அடிக்­கத் துவங்­கி­னார். இதில் ஒரு பெண்­ணுக்கு தலை­யி­லும் மற்­றொரு பெண்ணுக்கு கையி­லும் என நான்கு பேர் காயம் அடைந்­த­னர்.

சிசி­டிவி கேம­ரா­வில் பதி­வான­ காட்சிகள் காணொளியாக பரவிய தைக் கண்டு, முத்துவின் செய­லுக்கு பல­ரும் கண்­ட­னம் தெரி­வித்தனர். உண­வக உரி­மை­யா­ளர் மோகன்­ராஜும் காவல்துறை ஆணையரிடம் புகாரளித்­தார்.