செய்திக்கொத்து

2 mins read
e3006354-47a6-475b-964b-8dd6ddfcaeea
-

ஜெயசங்கரனுக்கு கிருமி பாதிப்பு உறுதி

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு (படம்) கிருமி பாதிப்பு உறுதியானதை அடுத்து, அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஏப்ரல் 16ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆட்சியர் உத்தரவு

வேலூர்: தொழிற்சாலை, உணவகங்கள், கடைகளில் பணிபுரிவோர் வரும் 16ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அப்படி, தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாவிடில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மூடி, முத்திரை வைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

தீவிர சிகிச்சையில் சகாயம் ஐஏஎஸ்

சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு காரணமாக கடந்த எட்டு நாள்களாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் ரத்த அழுத்தம் குறைந்துகொண்டே வருவதாகவும் மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஒரே நாளில் 250 குழந்தைகள் பாதிப்பு

சென்னை: மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கிருமி பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் 250 குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட 1,048 முதியவர்கள் உள்பட 6,711 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில், அதிகபட்சமாக சென்னையில் 2,105 பேரும் செங்கல்பட்டில் 611 பேரும் கோவையில் 604 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.