மருத்துவ நிபுணர் குழு: 45 வயதுக்கு மேலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் 'மூன்று மாத காலத்துக்கு எந்த கொண்டாட்டமும் வேண்டாம்'

மருத்துவ நிபுணர் குழு: 45 வயதுக்கு மேலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் 'மூன்று மாத காலத்துக்கு எந்த கொண்டாட்டமும் வேண்டாம்'

2 mins read
c85fd623-5abb-4ae2-bc78-c48c0f0197e1
-

சென்னை: முதல் அலையைவிட இப்போதைய இரண்டாவது அலையில் கொவிட்-19 கிருமித் தொற்று வேகமாகப் பரவி வருவ தால், அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு எந்த ஒரு நிகழ்ச்சி யையும் நடத்துவதற்கு திட்டமிட வேண்டாம் என்று தமிழக அரசின் மருத்துவ நிபுணர் குழுவினர் எச்சரித்து உள்ளனர்.

அத்துடன், "வீடு, அலுவலகம், அடுக்குமாடி வளாகங்களில் குழு அடிப்படையிலான நடவடிக்கைகள், கூட்டங்களைத் தவிர்த்து விடுங்கள். உங்களால் முடிந்தால் வீட்டிலிருந்து பணி புரியுங்கள்.

"வெளியில் சாப்பிடுவதைத் தவி ருங்கள். 45 வயதுக்கு மேற்பட்ட வர்கள் கட்டாயம் தடுப்பூசி போட் டுக்கொள்ளுங்கள். ஏதேனும் அறி குறிகள் இருப்பின் பயப்படாமல் பரிசோதனை செய்யுங்கள்," என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னையில் தினசரி பாதிப்பு 2,100ஐத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் பதிவான தினசரி பாதிப் பாகும் என்று மருத்துவக் குழு வினருள் ஒருவரான பிரதீப் கவுர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதே வேகம் தொடர்ந்தால் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப் பாடு அதிகரிக்கும், உயிரிழப்பு களும் அதிகமாகும் என்று பிரதீப் கவுர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், "கொரோனா அலை மீண்டும் சென்னையில் முன்பை விட வேகமாகப் பரவுகிறது.

"இந்த நிலை தொடர்ந்தால் ஏராளமான உயிர்களை இழப்போம்.

"இப்போதைய நிலையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முடுக்கிவிட்டாலும்கூட, தொற்று குறைய 14 நாட்கள் வரை ஆகும்.

"எனவே வீட்டிலும் அலுவல கத்திலும் குழுவாக எந்த ஒரு காரியத்திலும் பங்கேற்கவேண்டாம்.

"பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் முகக்கவசம் அணிவதும் வெளியே செல்வதைத் தவிர்ப்பதும் மிகவும் முக்கியம்," என பிரதீப் கவுர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தினசரி பாதிப்பு இதயத்தை கனக்க வைக்கிறது. அதன் வேகம் நாளும் தொடர்ந்தால், ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும். ஏராளமான உயிர்களையும் இழக்க நேரிடும். மக்கள் கவனமாக இருப்பது முக்கியம்.

சுகாதார நிபுணர் பிரதீப் கவுர்