மு.க.ஸ்டாலின்: அம்பேத்கர் வழியில் திமுக சேவையாற்றும்

மு.க.ஸ்டாலின்: அம்பேத்கர் வழியில் திமுக சேவையாற்றும்

1 mins read
8f9544f2-1011-4f79-a927-02d7a7874509
-

சென்னை: அம்­பேத்­கர் வழி­யில் பொது­மக்­க­ளுக்கு திமுக கட­மை­யாற்­றும் என்று திமுக தலை­வர் ஸ்டாலின் தெரி­வித்­துள்­ளார்.

சட்­ட­மே­தை­யான அம்­பேத்­கர் 1891ஆம் ஆண்டு ஏப்­ரல் 14ஆம் தேதி பிறந்­தார்.

சட்ட வல்­லு­ந­ராக, பொரு­ளா­தார நிபு­ண­ராக, அர­சி­யல் மேதை­யாக அவர் தன்னை நிரூ­பித்­தார். 1990-ல் அவ­ருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்­கப்­பட்­டது. அவ­ரது 130வது பிறந்த நாள் நேற்று இந்­தியா முழு­வ­தும் கொண்­டா­டப்­பட்­டது.

அர­சி­யல் கட்­சித் தலை­வர்­களும் இயக்­கங்­களும் அம்­பேத்­கர் சிலை­க­ளுக்கு ஆங்­காங்கே மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­னர். சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் பல­ரும் அம்­பேத்­க­ரின் சமூக பங்­க­ளிப்பை நினை­வூட்டி வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் சென்னை கோயம்­பேட்­டில் உள்ள அம்­பேத்­கர் சிலைக்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­னார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஸ்டா­லின், அம்­பேத்­க­ருக்கு திமுக சார்­பில் எங்­க­ளின் வீர­வ­ணக்­கத்தை செலுத்­தி­யி­ருக்­கி­றோம். இந்­திய அர­சி­ய­ல­மைப்பு சட்­டம் திருத்­தப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக இருந்­த­வர் அம்­பேத்­கர். தாழ்த்­தப்­பட்ட ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தன் வாழ்­நாள் முழு­வ­தும் பாடு­பட்ட மாபெ­ரும் தலை­வர். அவ­ரு­டைய வழி நின்று திமுக தன் கட­மையை உறு­தி­யாக, நிச்­ச­ய­மாக நிறை­வேற்­றும்," என்று குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், பிர­த­மர், அதிபர், மத்­திய பாது­காப்­புத்­துறை அமைச்சர், காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பின­ராயி விஜயன் உள்­ளிட்ட முக்­கிய தலை­வர்­கள் அம்­பேத்­க­ரின் பிறந்த நாளன்று அவரை நினைவு கூர்ந்து புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ள­னர்.