ஈ.வெ.ரா. சாலை பெயர் மாற்றம்; தலைவர்கள் கண்டனம்

ஈ.வெ.ரா. சாலை பெயர் மாற்றம்; தலைவர்கள் கண்டனம்

2 mins read
e7dccf99-9eef-48b6-a164-6e485debcb6f
ஈ.வெ.ரா. சாலை பெயர் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் சாலை என்று மாற்றப்பட்டுள்ளது. படம்: ஸ்டாலின் டுவிட்டர் -

சென்னை: சென்­னை­யில் ஈ.வெ.ரா நெடுஞ்­சா­லை­யில் நெடுஞ்­சா­லைத் துறை சார்­பில் வைக்­கப்­பட்ட அறி­விப்­புப் பல­கை­யில் 'கிராண்ட் வெஸ்­டன் டிரங்க் ரோடு' என்று எழு­தப்­பட்டு இருப்­ப­தற்கு ஸ்டா­லின், வைகோ ஆகி­யோர் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

திமுக தலை­வர் ஸ்டா­லின், "ஈ.வெ.ராம­சா­மி­யின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை பூந்­த­மல்லி நெடுஞ்­சா­லைக்கு 'ஈ.வெ.ரா., நெடுஞ்­சாலை' என 1979ல் அப்­போ­தைய முதல்­வர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்­டி­னார்.

"கடந்த 40 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக தமி­ழ­கத்­தில் ஆட்சி மாற்­றங்­கள் ஏற்­பட்­ட­போ­தும் அந்­தப் பெயரே நீடித்து வந்­தது.

"இந்த நிலை­யில் தற்­போது நெடுஞ்­சா­லைத் துறை சார்­பில் வைக்­கப்­பட்­டுள்ள பல­கை­யில் 'கிராண்ட் வெஸ்­டர்ன் டிரங்க்' ரோடு என எழு­தப்­பட்­டி­ருப்­ப­தும் நெடுஞ்­சா­லைத் துறை இணை­யத்­த­ளத்­தில் இவ்­வாறே குறிப்­பிட்­டி­ருப்­ப­தும் கடும் கண்­ட­னத்­திற்கு உரி­யது," என்று தெரி­வித்­துள்­ளார்.

"அதி­மு­க­வின் காபந்து அர­சாங்­கத்­துக்கு இன்­னும் சில நாட்­களே மிச்­ச­மி­ருக்­கும் நிலை­யில் இந்த திரிபு வேலைக்­கான உத்­த­ரவு எங்­கி­ருந்து வந்­தது? அதி­முக நிறு­வ­ன­ரான எம்.ஜி.ஆர். சூட்­டிய பெய­ரையே மாற்­றும் அள­வுக்கு காபந்து அரசு தன் டெல்லி எஜ­மா­னர்­க­ளின் கால் பிடிக்­கும் அர­சாக இருக்­கி­றதா அல்­லது ஈ.வெ.ரா. பெயரைச் சொன்­னாலே நடு­ந­டுங்­கும் மத­வெறி சக்­தி­க­ளின் அதி­கார ஆட்­டமா. எது­வாக இருந்­தா­லும் மீண்­டும் ஈ.வெ.ரா. நெடுஞ்­சாலை என உட­ன­டி­யாக மாற்­றம் செய்ய வேண்­டும். தாம­தம் செய்­தால் மே 2க்குப் பின் அதி­கா­ர­பூர்வ ஆணை வெளி­யா­கும் நிலை ஏற்­படும்," என்­று ஸ்டா­லின் தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

மதி­முக பொதுச் செய­லர் வைகோ, "ஆர்­எஸ்­எஸ் சங்பரி­வார் வகுத்த வியூ­கத்­தின்­படி டெல்லி எஜ­மான் மோடி பிறப்­பித்த ஆணையை பழ­னி­சாமி நிறை­வேற்றி இருக்­கி­றார். தமி­ழ­கத்­தின் தன்­மா­னத்தை அடகு வைத்துவிட்­டார். ஏற்­கெ­னவே, சென்னை விமான நிலை­யத்­தில் இருந்து காம­ரா­ஜர், அண்­ணா­துரை பெயர் நீக்­கப்­பட்­ட­தை­யும் பழ­னி­சாமி அரசு கண்­டு­கொள்­ள­வில்லை," என்று சாடி­யுள்­ளார்.

சென்னை சென்ட்­ரல் ரயில் நிலை­யத்­தில் இருந்து பூந்­த­மல்லி செல்­லும் சாலை­யில் பூந்­த­மல்லி நெடுஞ்­சாலை 'கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு' என்று அழைக்­கப்­பட்டு வந்­தது. 1979ல் ஈ.வெ.ரா நுாற்றாண்டு விழாவை ஒட்டி பூந்­த­மல்லி நெடுஞ்­சா­லைக்கு அவ­ரது பெயர் சூட்­டப்­பட்­டது. சென்னை மாந­க­ராட்­சியைப் பொறுத்­த­வரை ஈ.வெ.ரா. நெடுஞ்­சாலை என்று அழைக்­கப்­பட்­டது.

ஆனால் நெடுஞ்­சா­லைத் துறை ஆவ­ணங்­களில் கிராண்ட் வெஸ்­டர்ன் டிரங்க் ரோடு என்றே உள்­ளது. அதையே நெடுஞ்­சா­லைத் துறை­யி­னர் அண்மையில் வைத்த அறி­விப்புப் பல­கை­களில் எழுதி வைத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.