சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலை யத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ள தால் மொத்தம் 36 விமானச் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் கிருமிப் பரவல் அதிவேகமாகப் பரவி வருவதன் காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வரும் பயணி கள் எண்ணிக்கையும் வெகு வாகக் குறைந்துள்ளது.
இதையடுத்து, இங்கிருந்து புறப்படும் 18 விமானங்களும் சென்னைக்கு வரும் 18 உள்நாட்டு விமானங்களும் என 36 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

