தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் தேவையா என ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை சுகாதாரச் செயலர்: ஊரடங்கு போடும் அவசியம் இல்லை

தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் தேவையா என ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை சுகாதாரச் செயலர்: ஊரடங்கு போடும் அவசியம் இல்லை

2 mins read
baa6512d-9d61-4a77-a5d7-e78faa47559a
தடுப்பூசி உட்பட அனைத்து வகை மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறினார். அவருடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக்கும் உடனிருந்தார். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தைப் போல் ஊர­டங்கு போடு­வ­தற்­கான தேவை இன்­னும் ஏற்­ப­ட­வில்லை என்று சுகா­தா­ரத் துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

ஒரு­பு­றம் மாநி­லம் முழு­வ­தும் கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த தீவிர நட­வ­டிக்­கை­கள் முடுக்கி விடப்­பட்­டுள்ள நிலை­யில், மறு­பு­றம் கொரோனா தடுப்­பூ­சியை மக்க ளுக்­குப் போடும் பணி­யும் துரி­த­மாக நடந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது, "நாடெங்­கும் இரண்­டாம் கட்ட கொரோனா அலை உக்­கி­ரம் அடைந்து வரு­கிறது.

"மகா­ராஷ்­டி­ரா­வில் பொது முடக்­க­மும் மற்­றும் பல மாநி­லங்­களில் இரவு நேர பொது­மு­டக்­க­மும் அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

"இருப்­பி­னும், பொது­மு­டக்­கம் போடக்­கூ­டிய சூழல் இன்­னும் தமிழ்­நாட்­டில் ஏற்­ப­ட­வில்லை.

"கிரு­மிப் பர­வ­லால் பாதிக்­கப்­படு­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யைப் பார்த்து மக்­கள் பதற்­றம் அடைய வேண்­டாம். மாநி­லத்­தில் இத்­தொற்­றால் இறப்­போர் எண்­ணிக்கை குறை­வா­கவே உள்­ளது.

"ஆக்­சி­ஜன் வச­தி­யும் மருத்­துவ மனை­களில் போது­மான அள­வில் உள்­ளது.

"எனி­னும் அடுத்த இரு வாரங்­கள் மிக­வும் சவா­லான கால­கட்­டம் என்­ப­தால், மக்­கள் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம்.

"மக்­கள் அனை­வ­ரும் பொறுப்­பு­டன் ஒத்­து­ழைப்பை வழங்­கி­னால்­தான் இந்த தொற்­றைக் கட்­டுக்­குள் கொண்டு வர­மு­டி­யும்.

"தேவை­யற்ற பய­ணத்தை மக்­கள் தவிர்க்­க­வேண்­டும்," என்­பதே எங்­கள் வேண்­டு­கோள் என்று கூறிய ராதா­கி­ருஷ்­ணன், கடந்த சில நாள்­க­ளா­கவே நோய் எதிா்ப்­புச் சக்­தியை அதி­க­ரிக்­கும் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தற்கு மக்­கள் அதிக ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர் என்­றார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு கிருமி பாதிப்பு ஏற்­பட்­டா­லும் அதன் தாக்­கம் பெரிய அள­வில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தாது என மருத்­துவ வல்­லு­நர்­கள் தெரி­வித்­துள்­ளதாகவும் அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் தின­சரி கொரோனா பாதிப்பு 8,000ஐ நெருங்­கிய நிலை­யில் மேலும் கூடு­தல் கட்­டுப்­பா­டு­கள் தேவையா என்­பது குறித்து சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­க­ளு­டன் தலை­மைச் செய­லா­ளர் ராஜீவ் ரஞ்­சன் இன்று ஆலோ­சனை நடத்த உள்­ள­தா­க­வும் தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.

இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத் தில் மேலும் கூடு­தல் கட்­டுப்­பா­டு­கள் விதிப்­பது குறித்து முடிவு எடுக்­கப்படலாம் என­வும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.