தமிழக அரசு: கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறிச் சென்றுவிட்டது

தமிழக அரசு: கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறிச் சென்றுவிட்டது

1 mins read
fc2bac91-8dee-48a4-929f-ef01bf7ee87b
கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் கணவர் இறந்ததை அறிந்து, அகமதாபாத் கொவிட்-19 மருத்துவ மனையின் பிணவறை எதிரே நின்று கதறி அழும் பெண்ணை அவரது உறவினர் ஆறுதலாக அரவணைத்து தேற்றுகிறார்.படம்: ராய்ட்டர்ஸ் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா இரண்­டா­வது அலை பர­வும் வேகம் கட்­டுப்­பாட்டை மீறிச் சென்­று­விட்­ட­தா­க­வும் இந்த கிருமி எவ்­வாறு செயல்­ப­டு­கிறது என்­பதை மருத்­துவ நிபு­ணர்­க­ளால் உறுதியாக கணிக்க முடி­ய­வில்லை என்­றும் தமி­ழக அர­சின் தலைமை வழக்­க­றி­ஞர் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளார்.

வழக்கு ஒன்­றில் காணொளி மூலம் முன்­னி­லை­யான அவ­ரி­டம், கொரோ­னா­வின் இரண்­டா­வது அலை குறித்து, உயர்­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி சஞ்­சீவ் பானர்ஜி கேள்வி எழுப்­பி­னார்.

அப்­போது, கடந்த ஆண்டை விட கிரு­மிப் பர­வ­லின் தாக்கம் கைமீ­றிச் சென்­று­விட்­ட­தா­கக் குறிப்­பிட்ட தலைமை வழக்­க­றி­ஞர், "தற்­போ­து பெருந்­தொற்று எப்­படி பர­வு­கிறது என்­பதை மருத்­துவ நிபு­ணர்­க­ளால்கூட அறு­தியிட்டுக் கணிக்கமுடி­ய­வில்லை," என்­றார்.

அத்­து­டன், தமி­ழ­கத்­தில் போதிய அள­வில் கொரோனா தடுப்­பூ­சி­கள் கையி­ருப்­பில் இருப்­ப­தா­க­வும் 40 வய­தா­ன­வர்­க­ளுக்­கும் அவர்­கள் விரும்­பி­னால் இத்­த­டுப்­பூ­சி­யைப் போடும் திட்­டம் உள்­ள­தா­க­வும் தமி­ழக அர­சின் தரப்­பில் விளக்­கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, இப்­போ­தைய சூழ்­நி­லை­யில், நீதி­மன்­றங்­களில் பின்­பற்­ற­வேண்­டிய தடுப்பு நடை­மு­றை­கள் குறித்து ஆலோ­சிக்க, சுகா­தா­ரத்­து­றைச் செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ண­னுக்கு தலைமை நீதி­பதி அழைப்பு விடுத்­துள்­ளார்.