சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத உச்சமாக 7,819 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், இத்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 25 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். இவர்களில் எழுவர் சென்னை யைச் சோ்ந்தவா்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் புதன்கிழமை மட்டும் 97,668 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 7,819 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியானது.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,54,948ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் 2,564 போ் புதன்கிழமை அன்று செய்யப்பட்ட பரிசோதனையில் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தமிழகத்தில் மொத்த உயி ரிழப்பு 12,970 ஆகவும் சென்னை யில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,344 ஆகவும் அதிகரித்துள்ளது.
சென்னையைத் தவிர அதிக பட்சமாக செங்கல்பட்டு 772, கோவை 540, திருவள்ளூா் 383, தூத்துக்குடி 244, திருப்பூா் 225, திருச்சி 216, மதுரை 199 ஆகிய எண்ணிக்கையில் தொற்று பதிவானது. அதேபோன்று குறைந்தபட்சமாக பெரம்பலூரில் இருவரும் அரியலூரில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். 37,673 போ் தனி மைப்படுத்தப்பட்டு உள்ளனா்.

