திறக்கப்பட்ட நாளிலேயே மூடப்பட்ட கைபேசி கடை

திறக்கப்பட்ட நாளிலேயே மூடப்பட்ட கைபேசி கடை

1 mins read
e99bb0dd-b6a6-494f-a67d-057f28e197fc
-

நெல்லை: நெல்­லை­யில் கைபேசி கடை ஒன்றின் திறப்பு விழா­வுக்கு விஜய் டிவி­யின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்­சி­யில் நடிக்­கும் புகழ் வருகை தந்­தி­ருந்­தார்.

அவ­ரைக் காண கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறி ஏரா­ள­மான ரசி­கர்­கள் கடை முன்பு திரண்­ட­தால், கடை திறப்பு நாளன்றே கடையை மூடும் நிலை ஏற்பட்டது.

மாந­க­ராட்சியின் சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் கடையை வந்து பார்­வை­யிட்டு, கொரோனா விதி­களை மீறி­ய­தாகக் கூறி கடைக்கு 'சீல்' வைத்­த­னர்.

கொரானா தொற்­றின் இரண்டாவது அலை நெல்லை மாவட்டத்திலும் வேக­மாகப் பரவி வரு­ம் நிலையில், புக­ழைக் காண கைபேசிக் கடைக்கு வந்­தி­ருந்த ரசி­கர்­கள் சமூக இடை­வெ­ளியைப் பின்­பற்றாமலும் முகக்கவ­சம் அணி­யா­ம­லும் கூடி­ய­தால் நோய்த்தொற்று பர­வும் அபா­யம் அதிகம் நிலவுகிறது.