புதையல் ஆசை காட்டி ரூ.22 லட்சம் பறித்த சோதிடர் கைது

புதையல் ஆசை காட்டி ரூ.22 லட்சம் பறித்த சோதிடர் கைது

1 mins read
81ae2bde-5a90-4d1d-b1a8-2df01a319eb4
-

திண்­டுக்­கல்: வேட­சந்­தூ­ரில் தங்­கப் புதை­யல் எடுத்­துத் தரு­வ­தாக ஒரு தங்க நாண­யத்­தைக் கொடுத்து ஆசை காட்டி, பூஜை நடத்தி சொத்து முக­வ­ரி­டம் ரூ.22 லட்­சம் ரொக்­கத்­தை­யும் 45 சவ­ரன் நகை­க­ளை­யும் கொள்­ளை­ய­டித்­துச் சென்ற போலி சோதி­ட­ரைப் போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் உள்ள அரிய புத்­தம்­பட்டி கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் தங்­க­வேல், 51. சொத்து முக­வ­ரான இவ­ரி­டம், திருப்­பூர் மாவட்­டம், மடத்­துக்­கு­ளம் அருகே உள்ள கணி­யூர் கிரா­மத்­தைச் சேர்ந்த சோதி­டர் சசி­கு­மார், 51, அறி­மு­க­மா­னார். அதன்­பின், இவர் தான் ஒரு சோதி­டர் அல்ல என­வும் பூஜைகள் மூலம் தங்­கப் புதை­யல்­களை எடுப்­ப­வர் என­வும் புதுக் கதை கூறி­யுள்­ளார்.

பூஜை­கள் நடத்­து­வ­தா­கக் கூறி தங்­க­வே­லி­டம் இருந்து ஒவ்­வொரு முறை­யும் பல லட்­சம் ரூபாய் பெற்­றுள்­ளார் சசிக்­கு­மார். இதற்­கி­டையே, தங்­க­வேல் மனைவி, மாமி­யா­ரி­ட­மும் தனி­யா­கப் பேசி 45 சவ­ரன் நகை­க­ளை­யும் வாங்­கிக்கொண்­டார் சசி­கு­மார். மேலும், புல்­லட் பைக், ஒரு கார், கைபேசி ஆகி­ய­வற்­றை­யும் வாங்­கிக்­கொண்­டார். ஆனால், எந்த புதை­ய­லை­யும் தரா­மல் கம்பி நீட்­டி­ய­வர், இப்­போது கம்பி எண்­ணிக்கொண்­டுள்­ளார்.