சாகும் தறுவாயிலும் 30 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர்
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம், பூனைக்குத்தி பட்டியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஆனந்த் (படம்), திருச்சியில் இருந்து அன்னவாசல் நோக்கி பேருந்தை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீெரன்று மாரடைப்பு ஏற்படவே, தனது உயிரைப் பிடித்துக்கொண்டு, சாலை யைக் கடந்து, அருகில் இருந்த முட்புதர் பகுதியில் பேருந்தை நிறுத்தி தனது சாமர்த்தியத்தால் 30க்கும் ேமற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு உயிரை விட்டுள்ளார். மக்கள் பலரும் ஆனந்தை மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
மீண்டும் ஒரு வேட்பாளர் திடீர் மரணம்
சேலம்: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மோகன் பாபு, 61, வைரம் சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தலின்போது, தனது வெற்றிக்காகத் தீவிர பிரசாரம் செய்தவர், தேர்தலுக்குப் பிறகு வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வீட்டில் குளித்துக்கொண்டிருந்தவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட மாதவராவ், 63, கிருமித்தொற்று காரணமாக அண்மையில்தான் காலமானார்.

