தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரை விட்ட கர்ப்பிணி மகள்

தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரை விட்ட கர்ப்பிணி மகள்

2 mins read
86694c2a-baf6-4468-ac2f-1fe13a3c800f
தாயின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரை ஈந்துள்ள மகள் வெங்கடலட்சுமி. படம்: ஊடகம் -

கிருஷ்­ண­கிரி: யுகாதி புத்தாண் டின்போது தனது பெற்றோர் வீட்டில் நடந்த விருந்தில் கலந்துகொள் வதற்காக கணவருடன் வந்திருந்த மகளை, தந்தையே சுட்டுக் கொன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.

இந்தச் சம்பவத்தின்போது, மகள் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

தனது மகளைப் பார்த்து, "அய்யோ ஆத்­தி­ரத்­தில் என் மகளைச் சுட்­டுக்­கொன்று விட்­டேனே," என்று கத­றி அழுத­வாறு தந்தை மகளை அரசு மருத்­து­வ­­மனைக்குத் தூக்கிச்சென்­றுள்­ளார்.

ஆனால், வெங்­க­ட­லட்­சு­மியைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்கள், அவர் ஏற்­கெ­னவே இறந்­து­விட்டதாகக் கூறி­யுள்­ளனர்.

தந்தை அரு­ணாச்­ச­லத்தை தளி போலிசார் கைது செய்து, விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

கிருஷ்­ண­கிரி மாவட்­டம், தேன்­க­னிக்­கோட்டையை அடுத்­துள்ள கர­டிக்­கல் கிரா­மத்­தில் அரு­ணாச்­சலம், 60, மாதவி, 55, தம்­பதியர் வசித்து வரு­கின்­ற­னர். இவர்­க­ளது மகள் வெங்­க­ட­லட்­சுமி, 21.

இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ள நிலையில், வெங்­க­ட­லட்­சுமி தனது கண­வர் ஸ்ரீனி­வாசுடன் தாயார் வீட்­டிற்கு விருந்­துக்கு வந்­துள்­ள­ார்.

அப்போது, அரு­ணாச்­ச­லம் மது அருந்­தி­விட்டு வழக்­கம்­போல் வீட்­டிற்கு வந்து மனை­வி­யுடன் தக­ராறு செய்­துள்­ளார்.

பெற்றோருக்கு இடையே வாக்கு வாதம் முற்றியதை அடுத்து, ஒரு கட்­டத்­தில் கடும் ஆத்­தி­ரம் அடைந்த தந்தை வீட்­டில் இருந்த நாட்டுத் துப்­பாக்­கியை எடுத்து வந்து மனை­வியைச் சுட குறி வைத்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடலட்சுமி தனது தாயைக் காப்பாற்ற குறுக்கே ஓடி வந்து தடுத்துள்ளார்.

ஆனால், அருணாச்சலம் துப்பாக்கியின் விசையை அழுத்தி யதில் வெங்கடலட்சுமி உடலில் குண்டுகள் பாய்ந்ததில், அவர் ரத்த வெள்­ளத்­தில் கீழே சரிந்தார்.