சென்னை: தமிழகத்தில் கிருமிப் பரவலின் இரண்டா வது அலை கட்டுக்கடங்கா மல் பரவி வருவதால், கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகளை வழங்கும்படி மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை விடுத் துள்ளது. தமிழகத்துக்கு கூடுதலாக 15 லட்சம் கொவிஷீல்டு தடுப்பூசிகளும் 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்கவேண் டும் என்று கோரியுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்திலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக வந்த தகவலை அடுத்து, பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இதற்கு, தமிழகத்தில் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

