சென்னையில் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள காவல் ஆணையர் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசனை

சென்னையில் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள காவல் ஆணையர் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசனை

2 mins read
406a6062-a84c-4c78-b4f4-6fbc79a74a0c
ராஜீவ் ரஞ்­சன். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் தொடர்ந்து அதி­க­ரித்து வரும் கிரு­மிப் பரவ லைக் கட்­டுக்­குள் கொண்டுவரு­வது குறித்து, சென்னை தலை­மைச் செய­ல­கத்தில் தலை­மைச் செய­லா­ளர் ராஜீவ் ரஞ்­சன் தலை­மை­யில் நேற்று ஆலோ­ச­னைக் கூட்­டம் நடந்தது.

கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்க தடுப்­பூசி போடு­வது, பாது­காப்பு விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றச் செய்­வது, பின்­பற்­றா­மல் இருப்­ப­வர்­க­ளுக்கு அப­ரா­தம் விதிப்­பது போன்ற நட­வ­டிக்­கை­களை தமி­ழக அரசு மேற்­கொண்டு வரு­கிறது.

இருப்­பி­னும், இந்­தக் கட்­டுப்­பாடு கள் பல­வற்­றை­யும் பொது­மக்­கள் பின்­பற்­றி­னா­லும்­கூட நோயின் தாக்­கம் கட்­டுப்­ப­டா­மல் தீவி­ரம் அடைந்து வரு­வ­தால், மேலும் கட்­டுப்­பா­டு­களை அதி­கப்­ப­டுத்துவதற்கு மாநில அரசு முடிவு செய்­துள்­ளது.

சென்னை உள்­பட தமி­ழ­கம் முழு­வ­தும் கட்­டுப்­பா­டு­களை எவ்­வி­தத்­தில் செயல்­ப­டுத்­த­லாம், 'பிளஸ் 2' தோ்வை எப்­போது நடத்த லாம் என்­பது போன்ற பல்­வேறு முக்­கிய அம்­சங்­கள் குறித்­தும் ஆேலாசிக்­கப்­பட்­டது.

வணி­கம், தொழில் நிறு­வ­னங் களைப் பாதிக்­காத வகை­யில் கட்­டுப்­பா­டு­க­ளைக் கொண்டு வரு­வதற்கும் வார இறுதி நாட்­க­ளான சனி, ஞாயிறு ஆகிய நாட்­களில் ஊர­டங்கை பிறப்­பிக்க வாய்ப்­புள்­ள­தாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆலோ­சனைகள் குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கக்கூடும் எனவும் தக­வல்­கள் தெரி­வித்துள்ளன.

தமி­ழ­கத்­தில் அன்­றாட கிருமி பாதிப்பு 8,000ஐ நெருங்­கி­யுள்­ளது.

நோயா­ளி­க­ளால் மருத்­துவ மனை­களில் படுக்­கை­கள் நிரம்பி வரு­கின்­றன. கல்­லூ­ரி­கள், பள்­ளிக்கூடங்­கள், ரயில்­கள் உள்­ளிட்ட அனைத்­தும் சிகிச்சை மையங்­க­ளாக மாறி வரு­கின்­றன.

இதற்­கி­டையே, சென்னை பெரு நகர காவல் எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் பல்­வேறு தடை­களைப் பிறப்­பித்து மாந­கர காவல் ஆணை யர் மகேஷ்­கு­மார் அகர்­வால் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

அதன்படி, ஏப்­ரல் 30ஆம் தேதி வரை பொது­மக்­கள் ஒன்றுகூடு­வது, மனி­தச் சங்­கிலி, பொதுக்­கூட்­டங்­களை நடத்த தடை விதிக்­கப்­பட்­டுள்­ளதாகத் தெரி­வித்­துள்­ளார்.