ஒரே நாளில் 256 குழந்தைகள் கிருமிப் பரவலால் பாதிப்பு

ஒரே நாளில் 256 குழந்தைகள் கிருமிப் பரவலால் பாதிப்பு

1 mins read
e532f4f5-6157-4a41-9aae-6d72a3cded7b
-

சென்னை: கொரோனா இரண்டா வது அலை கார­ண­மாக குழந்தை களும் அதி­க­ள­வில் பாதிக்­கப்­பட்டு வரு­வது தெரி­ய­வந்­துள்­ளது. தமிழ கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் 256 குழந்­தை­கள் இத்­தொற்­றுக்கு ஆளாகி உள்­ள­னர்.

இது­கு­றித்து தமி­ழக சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்­டுள்ள தக­வ­லில், "தமி­ழ­கத்­தில் வியா­ழ­னன்று மட்­டும் 7,987 பேர் புதி­தாக கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

"இவர்­களில் 2,558 பேர் சென்­னை­யைச் சேர்ந்­த­வர்­கள். இவர்க ளுடன் 256 குழந்­தை­களும் தமிழ கம் எங்­கும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

"கடந்த ஆண்டு கொரோனா பர­வ­லின்­போது முதி­ய­வர்­களும் இணை நோய் உள்­ள­வர்­களும் அதி­க­ள­வில் பாதிக்­கப்­பட்­ட­னர்.

"ஆனால், தற்­போ­தைய கொரோனா கார­ண­மாக ஒன்று முதல் எட்டு வயது வரை­யுள்ள குழந்­தை­கள் அதி­கம் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்," என்று கூறப்­பட்­டுள்­ளது.

குழந்­தை­க­ளுக்கு பர­வும் கொரோ­னா­வால் காய்ச்­சல், மூக்­க­டைப்பு, மூச்­சுத்­தி­ண­றல், வயிற்­றுப்­போக்கு, தலை­வலி போன்ற நோய் அறி­கு­றி­கள் இருப்­ப­தாக மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர். குழந்­தை­க­ளுக்­கான தடுப்­பூசி இன்­னும் கண்டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.