நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார். அவருக்கு வயது 59.

மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்ரல் 16) காலை 11 மணி அளவில் சென்னையின் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் நினைவிழந்த நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விவேக்கின் உடல் சென்னையின் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், உறவினர்கள், திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1961ஆம் ஆண்டு தமிழகத்தின் கோவில்பட்டியில் பிறந்த நடிகர் விவேக், 1987ஆம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எண்ணற்ற திரைப்படங்களில் அவர் நடித்து வந்தார்.

தமிழ் திரைப்படங்களில் தமது நகைச்சுவையுடன் சேர்ந்து சமூகக் கருத்துகளையும் தொடர்ந்து பேசி வந்தவர் அவர். 'சின்ன கலைவானர்' என்ற பெயரையும் அவர் பெற்றார்.

2000 முதல் 2001ஆம் ஆண்டில் மட்டும் 50க்கும் அதிகமான திரைப்படங்களில் விவேக் நடித்தார். இதுவரை 220க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை விவேக் பெற்றார். சிறந்த நகைச்சுவை நடிகருக்காக ஐந்து முறை மாநில அரசின் விருதையும் அவர் பெற்றார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஹரிஷ் கல்யாண் போன்ற பல்வேறு நடிகர்களுடன் தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து நடித்து வந்தவர் விவேக்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த அவர், மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார். தமிழக அரசின் 'பிளாஸ்டிக் இல்லா தமிழகம்', 'கொரோனா பாதுகாப்பு' போன்ற விழிப்புணர்வு குறும்படங்களிலும் ஆர்வத்துடன் முன்வந்து நடித்தவர் விவேக்.

2020ஆம் ஆண்டு தாராளப் பிரபு படத்தில் இறுதியாக விவேக் நடித்திருந்தார். அண்மையில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன்-2 திரைப்படத்தில் நடிக்க விவேக் ஒப்பந்தமாகியிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!