விவேக் இல்லையே என்று நினைக்கும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது: வடிவேலு

விவேக் இல்லையே என்று நினைக்கும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது: வடிவேலு

1 mins read
aaff1546-6271-45f1-9445-8203934dbe4c
நகைச்சுவை நடிகர் வடிவேலு, நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். படம்: ஊடகம் -

நகைச்சுவை நடிகர் வடிவேலு, நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "என் நண்பன் விவேக் மாரடைப்பால் இறந்துட்டார் என்று இன்று காலை செய்திகளில் பார்த்து தெரிந்துகொண்டேன். அந்தச் செய்தியைப் பார்த்ததும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாகிவிட்டது. அதைப் பற்றி பேசவே முடியவில்லை. அவர் இல்லையே என்று நினைக்கும்போது எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது.

"பிறருக்கு உதவும் சிந்தனை அதிகம் உள்ளவர். அப்துல் கலாம் ஐயா அவர்களுடன் நல்ல நெருக்கமாக இருந்தவர். அதே மாதிரி விழிப்புணர்வு பிரசாரம், மரம் நடுவது என எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறார். எனக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் அவரும் ஒருவர். நானும் அவரது தீவிர ரசிகர்தான். என்னால் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. என் நெஞ்சார்ந்த இரங்கலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்று கண்ணீர்மல்க கூறினார் வடிவேலு.

குறிப்புச் சொற்கள்