வேளச்சேரியில் விறுவிறுப்பாக நடந்த மறு வாக்குப்பதிவு

வேளச்சேரியில் விறுவிறுப்பாக நடந்த மறு வாக்குப்பதிவு

1 mins read
bc123dc8-f975-417f-86e3-c8a6a3da7a0c
-

வேளச்­சேரி: வேளச்­சேரி தொகு­திக்கு உட்­பட்ட 92வது வாக்­குச்­சா­வடியில் நேற்று மறுவாக்­குப்­பதிவு விறு­வி­றுப்­பாக நடந்தது. இந்த வாக்­குச்­சா­வடி ஆண் வாக்­கா­ளர்­க­ளுக்­கா­னது என்­ப­தால் 548 ஆண்­கள் மட்­டும் மீண்டும் வாக்­க­ளித்­துச் சென்­ற­னர்.

வேளச்­சே­ரி­யில் உள்ள வாக்­குச்­சா­வடி ஒன்­றில் கடந்த 6ஆம் தேதி வாக்­குப்பதிவு நடந்த தினத்தில் இரவு நேரத்­தில் மூன்று வாக்­குப்­பதிவு இயந்­தி­ரங்­களை மாந­க­ராட்சி ஊழி­யர்­கள் இரு­சக்­கர வாக­னத்­தில் கொண்­டு ­சென்­ற­னர்.

இந்த விவ­கா­ரம் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்த, அர­சி­யல் கட்­சி­யி­னர் மறு­தேர்­தல் நடத்தவேண்­டும் என வலி­யு­றுத்­தி­னர். இது­தொ­டர்­பாக தேர்­தல் ஆணைய அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்தி, அவை பழு­தான வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் என்று விளக்­கம் அளித்­த­ பின்னரும் அர­சி­யல் கட்­சி­யி­ன­ரின் வலி­யு­றுத்தியதால் மறு வாக்­குப்­ப­திவு நடத்­தப்­பட்­டது.

வாக்­கா­ளர்­க­ளுக்கு ஏற்­கெனவே 6ஆம் தேதி நடத்தப்பட்ட வாக்களிப்பின்போது இடது கை ஆள்­காட்டி விர­லில் கருப்பு மை வைக்­கப்­பட்­டதால், நேற்று நடந்த மறு வாக்­குப்­ப­திவின்போது வாக்­கா­ளர்­க­ளின் இடது கை நடுவிர­லில் மை வைக்­கப்­ப­ட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.