பெரம்பலூரில் தொற்று குறைவுக்கு
மக்கள் தொகையே காரணம்
பெரம்பலூர்: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனா கிருமிப் பரவல் குறைவாக உள்ளது.
இதுகுறித்து அம்மாவட்ட சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் டாக்டர் கீதாராணி ெசய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தபோது, "பெரம்பலூரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவு. வசிப்பிடங்களுக்கு இடையேயும் நெருக்கமின்றி அதிக இடைவெளி உள்ளது.
"அத்துடன், இங்கிருந்து சென்னை, திருப்பூர், கோவை போன்ற வெளிமாவட்டங்களுக்குச் சென்றுள்ள பலரும் சொந்த ஊர் திரும்பினால் ஒருவேளை தொற்று அதிகரிக் கக்கூடும்," என குறிப்பிட்டார்.
படிக்கட்டில் நின்று பயணம் செய்த மூதாட்டி கீழே விழுந்து பலி
தூத்துக்குடி: அண்மையில் பேருந்தில் நின்றபடி பயணம் செய்யக்கூடாது என தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், இந்த விதிமுறைகளை மீறும் வகையில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த மூதாட்டி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கே.துரைசாமிபுரத்தைச் சேர்ந்த ஜெயா என்ற மூதாட்டி தனியார் பேருந்தில் தூத்துக்குடி, விளாத்திகுளத்துக்குச் செல்ல படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார். அப்போது ஜெயாவின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வரவே, அவர் பேச முயன்றபோது, தவறி கீழே விழுந்து இறந்தார்.
அபராதம் கட்ட மறுத்தவர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முகக்கவசம் அணியா மல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முருகேசன் என்பவருக்கு அபராதம் விதிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய ஆடவரை போலிசார் கைது செய்த னர். அபராதத்தை கட்ட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட முருகேசன் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கினார்.
திருப்பத்தூரில் மீண்டும் நில அதிர்வு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கொரட்டி, கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் நில அதிர்வு வெள்ளிக்கிழமை இரவும் ஏற்பட்டதாகக் கூறி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
இதேபோன்று கடந்த 11ஆம் தேதி இரவிலும் இம் மாவட் டத்தின் பல்வேறு இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த நில அதிர்வுகள் குறித்து டெல்லியில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ள தாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சருக்கு சிகிச்சை
சென்னை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் அவரது மனைவி செல்வராணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு பகுதி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எட்டாவது இடத்தில் தமிழகம்
சென்னை: கொரோனா நோய்த்தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், டெல்லி, சண்டிகார், கா்நாடகம், மத்தியப்பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங் களைத் தொடா்ந்து தமிழகம் எட்டாவது இடத்தில் உள்ளது. நாளொன்றுக்கு நோய்த்தொற்றின் சராசரி அளவு 8.4% ஆக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

