சென்னை: நகைச்சுவை நடிகரும் தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும் சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்ட வருமான நடிகர் விவேக் நேற்று அதிகாலை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 59.
இந்த துயரச் செய்தியைக் கேட்டு தமிழக மக்கள், தமிழ்த் திரையுலகினர் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளானதுடன் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
திரைத்துறையில் ஒப்பற்ற நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக்கின் மறைவுக்கு பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்களும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசின் 'பத்ம ஸ்ரீ' விரு தையும் பெற்றுள்ள விவேக்குக்கு பொதுமக்களும் ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மரங்களை நட்டு கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்த சமூக ஆர்வலருமான நடிகர் விவேக்குக்கு ஏராளமானோர் மரக்கன்றுகளுடன் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே, விவேக்கிற்கு சிகிச்சை பலனளிக்காமல் போனதன் காரணம் குறித்து மருத்துவ மனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது நடிகர் விவேக்குக்கு சுயநினைவோ, நாடித்துடிப்போ இல்லை என்று தெரிவித்துள்ளது.
உடல்நிலையைப் பரிசோதித்து உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள், அவரது இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
அதேநேரம், தடுப்பூசி தொடர் பான சர்ச்சைக்கு விளக்கமளித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், "நடிகர் விவேக் மிகவும் நல்ல எண்ணத்தில் தான் தடுப்பூசி போட்டுக் கொண் டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக் கிறது. மத்திய அரசின் தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளின்படி இதயக்கோளாறு, புற்றுநோய் போன்ற பல்வேறு நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதற்கும் நேற்று தடுப்பூசி போட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை," என்றார்.
சென்னை: பல கோடி மக்களை மகிழ்வித்த கலைஞர் நடிகர் விவேக்கின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே முழு பொறுப்பேற்கவேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி (படம்) கூறியுள்ளார்.
"தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு முன்பு வரை ஆரோக்கியமாக இருந்த சின்னக் கலைவாணர் விவேக், தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிறகு மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
"நன்றாக இருந்த அவருக்கு 100% இருதய அடைப்பு இருந்த தாக மருத்துவர்கள் கூறியிருப் பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தடுப்பூசி தொடர்பான குழப்பங்களை மறைக்கவே மத்திய, மாநில அரசுகள் இதுபோல் நாடகமாடு கின்றனவோ? என சந்தேகம் வருகிறது," என்று கூறியுள்ளார்.

