பட்டாசுக் கடையில் தீ: இரு பேரப்பிள்ளைகளுடன் ஆடவர் மரணம்

பட்டாசுக் கடையில் தீ: இரு பேரப்பிள்ளைகளுடன் ஆடவர் மரணம்

1 mins read
e956a92a-976a-4e14-993e-234f7927eb54
-

வேலூர்: வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடை ஒன்று உள்ளது.

இந்தக் கடையில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் லேசாக பற்றி எரிந்த தீ அதன் பின்னர் தீவிரமாக கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அப்போது கடையில் இருந்த பட்டாசுக் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

திடீரென தீ எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து கடைக் காரர்கள் வாளிகளில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர்.

ஆயினும் தீ வேகமாகப் பரவி யது. இது குறித்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடினார்கள்.

கடையின் உரிமையாளர் மோகன் உள்பட 3 பேரும் கடைக்குள் சிக்கி உள்ள நிலையில் அவர்களை மீட்க வும் தீயணைப்பு படையினர் போரா டினார்கள்.

ஆனால் தீயின் கோரப் பிடியில் சிக்கி மோகன் மற்றும் அவரது பேரக்குழந்தைகள் தனுஷ் (7), தேஜஸ் (6) ஆகிய மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

இவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.