சென்னை: நடிகர் விவேக் மறைந்த நிலையில் அவரது மரக்கன்று நடும் முயற்சியை நிறைவேற்றும் பணியில் நடிகர் விஜய்யின் ரசிகைகள் ஈடுபட்டுள்ள புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சமூக செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிய விவேக் முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் ஊக்குவிப்பு மூலம் மரக்கன்றுகள் நடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு பல பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வந்தார்.
தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவது விவேக்கின் கனவாக இருந்தது.
இந்நிலையில் அவரது மறைவுக்குப் பிறகும் அவரது கனவை நிறைவேற்ற வேண்டும் என பலர் கூறி வருகின்றனர். அந்த வகையில் விஜய் மக்கள் மன்ற ரசிகைகள் சிலர் மரக்கன்று நடும் புகைப்
படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து பலரும் மரக்கன்று நட முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரம் அதிகரித்து வருகிறது.

