தமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள்: ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள்: ஸ்டாலின் கோரிக்கை

1 mins read
40763884-fca5-41ed-9ec7-36872e00ac69
-

சென்னை: தமிழ்­நாட்­டில் தடுப்­பூ­சிக்கு நில­வும் பற்­றாக்­கு­றையைத் தீர்க்­கும் வகை­யில் 20 லட்­சம் தடுப்­பூசி மருந்­து­களை உட­ன­டி­யாக வழங்க வேண்­டும் என பிர­த­மர் மோடிக்கு திமுக தலை­வர் மு.க. ஸ்டா­லின் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

இது தொடர்­பாக அவர் கடி­தம் ஒன்றை பிர­த­ம­ருக்கு அனுப்பி உள்­ளார். அதில், "தமிழ்­நாட்­டில் வெறும் 46.70 லட்­சம் பேருக்கு மட்­டுமே தடுப்­பூசி செலுத்­தப்­பட்­டுள்­ளது. அவர்­களில் 40.64 லட்­சம் பேருக்கு முதல்­மு­றை­யும் 6.05 லட்­சம் பேருக்கு இரண்­டா­வது முறை­யும் தடுப்­பூசி செலுத்­தப்­பட்­டுள்­ளது.

தற்­போது மாநி­லம் முழு­வ­தும் தடுப்­பூசி மருந்­து­கள் பற்­றாக்­குறை மிக அதிக அள­வில் இருப்­ப­து­டன் தடுப்­பூசி செலுத்­திக்­கொள்­வ­தற்­காக அரசு மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் செல்­லும் மக்­கள் தடுப்­பூசி மருந்து இல்லை எனக் கூறி திருப்பி அனுப்­பப்­ப­டு­வ­தாக செய்­தி­கள் வரு­கின்­றன.

"மத்­திய அர­சி­ட­மி­ருந்து 20 லட்­சம் கோவேக்­சின், கோவி­ஷீல்டு தடுப்­பூசி மருந்­து­களை வழங்­கு­மாறு மத்­திய அர­சி­டம் மாநில அரசு ஏற்­கெ­னவே கேட்­டி­ருப்­ப­தா­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

"எனவே, தாங்­கள் தலை­யிட்டு மாநில அர­சால் கேட்­கப்­பட்­டுள்ள 20 லட்­சம் தடுப்­பூசி மருந்­து­களை உட­ன­டி­யாக அனுப்­பு­வ­து­டன் தமி­ழக மக்­கள்­தொ­கைக்கு ஏற்ப அவற்றை அதிக அளவு வழங்க வேண்­டும் என்று சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­கத்தை அறி­வு­றுத்த வேண்­டும் எனக் கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்று ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.