தேர்தலில் அதிக தோல்வி: பத்மராஜனுக்கு பாராட்டுப் பத்திரம்

தேர்தலில் அதிக தோல்வி: பத்மராஜனுக்கு பாராட்டுப் பத்திரம்

1 mins read
742db15f-5ff2-49bf-8257-b42434b7f133
-

மேட்­டூர்: சேலம் மாவட்­டம் மேட்­டூர் இரட்­டை­பு­ளிய மரத்­தூ­ரைச் சேர்ந்­த­வர் பத்­ம­ரா­ஜன், 63 (படம்). இவர் 1988ஆம் ஆண்டு முதல், தொடக்க வேளாண்மை கூட்­டு­ற­வுச் சங்­கத் தேர்­த­லி­லும் உள்­ளாட்சி, சட்­ட­மன்­றம், நாடா­ளு­மன்­றம், அதி­பர் தேர்­தல்­க­ளி­லும் போட்­டி­யி­டு­வ­தற்­காக இது­வரை 218 முறை வேட்­பு­மனு தாக்­கல் செய்­துள்­ளார். ஆனால் எந்­தத் தேர்­த­லி­லும் வெற்றி பெற­வில்லை.

இம்­மா­தம் நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சா­மியை எதிர்த்து எடப்­பாடி தொகு­தி­யி­லும் கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யனை எதிர்த்து அந்த மாநி­லத்­தில் உள்ள தர்­ம­டம் தொகு­தி­யி­லும் பத்­ம­ரா­ஜன் போட்­டி­யிட்­டார். அதன் முடி­வு­கள் இன்­னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வி­லேயே அதி­கத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு தோல்வி அடைந்­த­வர் என்று குறிப்­பிட்டு ஹரி­யா­னா­வைச் சேர்ந்த 'இந்­தியா புக் ஆஃப் ரெக்­கார்ட்' அமைப்பு பத்­ம­ரா­ஜ­னுக்கு சான்­றி­தழ் வழங்கி உள்­ளது. மேலும் அவ­ரது பெயரை 2021 சாத­னை­யா­ளர் பட்­டி­ய­லி­லும் அந்த அமைப்பு இடம்­பெ­றச் செய்­துள்­ளது. உலக சாதனை புத்­த­க­மான கின்­ன­சில் இடம்­பி­டிப்­பதே தமது லட்­சி­யம் என்­றும் அது­வரை எல்­லாத் தேர்­தல்­க­ளி­லும் போட்­டி­யி­டப் போவ­தா­க­வும் பத்­ம­ரா­ஜன் கூறி­யுள்­ளார்.