சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கொரோனா இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் நாடகம் ஆடுவதாக வும் தடுப்பூசியால் ஆபத்து வரும் என்றும் ஆவேசத்துடன் கூறினார். அவரது இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என்று கூறினார். மேலும் ஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மன்சூர் அலிகான் மீது போலிசில் புகாரளிக்க முடிவு
1 mins read
-

