செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9c50421b-9174-401c-8326-e462a814b778
-

நன்றி தெரிவித்த விவேக் மனைவி

சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி (படம்) நேற்று செய்தியாளர்களிடம் பேசி னார். அப்போது அவர், "என் கணவரை இழந்திருக்கும் இந்த நேரத்தில் பக்கபலமாகவும் உறு துணையாகவும் நின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கை நடத்தியதற்கு நாங்கள் என்றைக்கும் நன்றி யுடன் இருப்போம். இது என் கணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவம்," என்று கூறினார்.

விவேக் மர­ணம்: அமைச்­சர் விளக்­கம்

சென்னை: நடி­கர் விவேக் இறந்­த­தற்கு கொரோனா தடுப்­பூசி கார­ணம் என சமூக ஊட­கங்­களில் பரவி வரும் தக­வல்­கள் குறித்து தமி­ழக சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் கருத்து கூறி­யுள்­ளார். "இது­பற்றி ஏற்­கெ­னவே சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் விளக்­கம் அளித்­துள்­ளார். மருத்­து­வ­மனை நிர்­வா­க­மும் தேவை­யான விளக்­கத்தை அளித்­துள்­ளது. தடுப்­பூ­சி­யால் எந்த பக்­க­வி­ளை­வும் இல்லை என்­பதை பல­முறை விளக்கியுள்­ளோம்," என்று கூறி­யுள்­ளார்.

விமான இருக்கைக்கு அடியில்

ஆறு கிலோ தங்கக் கட்டிகள்

ஆலந்­தூர்: துபா­யி­லி­ருந்து சென்னை வரும் விமா­னத்­தில் தங்­கம் கடத்­தப்­ப­டு­வ­தா­கக் கிடைத்த தக­வ­லைத் தொடர்ந்து சென்னை அனைத்­து­லக விமான நிலைய சுங்­கத் துறை ஆணை­யர் ராஜன் சவுத்ரி தலை­மை­யில் அதி­கா­ரி­கள் குவிக்­கப்­பட்டு கண்­கா­ணிக்­கப்­பட்­டது. துபா­யி­லி­ருந்து வந்­தி­றங்­கிய விமா­னத்­திற்­குள் அவர்­கள் சோதனை செய்­த­போது ஓர் இருக்கை சற்று தூக்­கி­ய­படி இருந்­தது. அத­னைச் சரி­செய்ய முயன்­ற­போது அடி­யில் இரண்டு பொட்­ட­லங்­கள் இருப்­பதை அதி­கா­ரி­கள் கண்­டனர். அந்­தப் பொட்­ட­லங்­களில் ஆறு தங்­கக் கட்­டி­கள் இருந்­தன. அதன் எடை ஆறு கிலோ என்­றும் அவற்­றின் மதிப்பு ரூ.2 கோடியே 90 லட்­சம் என்­றும் சுங்­கத் துறை­யி­னர் மதிப்­பிட்­ட­னர். இவற்றைக் கடத்தி வந்தது யார் என்று அதி­கா­ரி­கள் விசா­ரிக்­கத் தொடங்கி உள்­ள­னர்.

நீண்டதூரப் பேருந்துகள் குறைப்பு

சென்னை: கொரோனா கிருமி மீண்­டும் பரவிவரும் சூழ்­

நி­லை­யில் பய­ணி­க­ளின் வருகை குறைந்­துள்­ள­தால் நீண்ட தூரப் போக்­கு­வ­ரத்­துக் கழக பேருந்­து­களில் கணி­ச­மான அளவுக்கு வரு­வாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து பேருந்­து­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைக்க முடிவு செய்­யப்­பட்­டுள்ளது. அதன்­படி சென்­னை­யி­லி­ருந்து வெளி­யூர்­க­ளுக்கு இயக்­கப்­படும் நீண்­ட­தூரப் பேருந்­து­களில் 25% நிறுத்­தப்­பட்­டு உள்­ளன.