குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையின் அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவனை ஒன்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு குடலிறக்க நோய் உள்ளதால் ஏற்கெனவே திட்டமிட்டபடி அறுவை சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறுவை கிசிச்சைக்கு முன்பாக அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
அறுவை சிகிச்சைக்குப்பின் ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

