அண்ணா பல்கலைக்கழகம்: புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதி

அண்ணா பல்கலைக்கழகம்: புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதி

1 mins read
513959cc-5e5a-45fd-ba95-92ef9598a5e7
தமிழகத்தில் கிருமிப் பரவல் தினமும் அதிகரித்துவரும் நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

மே மாதம் நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக 'செமஸ்டர்' பருவத் தேர்வின்போது, பொறியியல் மாண வர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

இத்தேர்வில், கேள்விகள் நேரடியாக கேட்கப்படாமல், சுற்றி வளைத்து கேட்கப்பட்டிருக்கும். மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்துகொண்டு விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது.

அதன்படி விடை எழுதும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து புரிந்துகொண்டு விடை அளிக்கலாம்.

அதேபோன்று தேர்வின்போது இணையத்தளத்தைப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்த முறை பருவத் தேர்வுகளை இணையம் வழி நடத்திவந்த அண்ணா பல்கலைக்கழகம் இப்போது அந்த முறையைக் கைவிட்டுள்ளது. இம்முறை மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிருமிப் பரவல் தினமும் அதிகரித்துவரும் நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்