திறப்பு விழா அன்றே மூடப்பட்ட பிரியாணி கடை

திறப்பு விழா அன்றே மூடப்பட்ட பிரியாணி கடை

1 mins read
9ba43edc-9510-429e-9ab6-2189bc57c2b8
-

வேளச்ே­சரி: வேளச்­சே­ரி­யில் கொரோனா தடுப்பு விதி­களை மீறி­ய­தாக பிரி­யாணி கடை ஒன்று திறப்பு விழா அன்றே மூடப்­பட்டு உள்­ளது.

வேளச்­சே­ரி­யில் 'தி வெட்­டிங் பிரி­யாணி' என்ற பெய­ரில் கடை ஒன்று புதி­தாக திறக்­கப்­பட்­டதை அடுத்து, திறப்பு விழா சலு­கை­யாக பிரி­யா­ணி­யின் விலை­யில் 50% தள்­ளு­படி வழங்­கு­வ­தாக கடை­யின் உரி­மை­யா­ளர்­கள் அறி­வித்­தி­ருந்­த­னர்.

'ஒன்று வாங்­கி­னால் ஒன்று இல­வ­சம்' என்ற அறி­விப்­பை­யும் செய்­தி­ருந்­த­னர்.

இதைக் கேள்­விப்­பட்ட மக்­கள் தனி­ம­னித பாது­காப்பு இடை­வெ­ளி­யைப் பின்­பற்­றா­மல் பிரி­யாணி கடை முன்பு சாரை சாரை­யா­கக் குவிந்­த­னர். அவர்­களில் ஒரு சிலர் முகக்கவ­சம் அணிந்­தி­ருக்­க­வில்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

மக்­கள் கூட்­டம் அதி­க­ரித்­த­தால் அங்கு வந்த மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் கடையை மூடும்­படி அறி­வு­றுத்­தி­னர்.

இத­னால் கோபம் அடைந்த பொது­மக்­கள், "தேர்­தல் நேரத்­தில் மட்­டும் கிருமி பர­வ­வில்­லையா? அப்­போ­தும்­தான் வேட்­பா­ளர்­க­ளைக் காண மக்­கள் திரண்­ட­னர். அப்­போது பர­வாத கொரோனா இப்­போது மட்­டும் பர­வுமா?" என்று அதி­கா­ரி­க­ளு­டன் வாக்­கு­வா­தம் செய்­த­னர். எனி­னும், சற்று நேரத்­தில் அதி­கா­ரி­கள் அந்­தக் கடையை மூடி, முத்­திரை வைத்­த­னர்.